பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




43

பொருள்கள் ஏராளமாகக் கிடைத்ததனால், வயிறாரவுண்டு இன் புறவும், உழைக்க இயலாதவர்க் குதவி அறம் வளர்க்கவும் ஏதுவாயிற்று.

பொற்கால மருதநில ஆட்சித்துறையில், தனியூராட்சி போய், ஒரு பேரூரும் அதனைச் சூழ்ந்த உட்கிடை போன்ற சிற்றூர்களுஞ் சேர்ந்த கூட்டூராட்சி தோன்றி, பின்னர் அதற்கும் மேற்பட்ட குறுநில மன்னராட்சி ஏற்பட்டிருத்தல் வேண்டும்.

தனியூராட்சி என்பது, எல்லையளவில் இக்காலத்து நாட் டாண்மைக்காரன், பெரியதனக்காரன், பட்டக்காரன், அம்பலகாரன், மூப்பன், தலைவன், கவுண்டன், குடும்பன் முதலிய பெயர்களாற் குறிக்கப்படும் குடித்தலைவன் ஆட்சி போன்றது. ஆயின், அதிகார அளவில் பிற்காலத்து வேந்தன் ஆட்சி போன்றே கோன்மை (Sovereignty) கொண்டது. கூட்டூராட்சி என்பது, கிரேக்க நாட்டு நகர நாடு (City State) போன்றது. ஆதலால், அதுவுங் கோன்மை கொண்டதே. குறுநில மன்னராட்சி என்பது, பாரி காரி முதலிய வேளிராட்சி போன்றது; சின்னூறூர்களும் பன்னூறூர்களுங் கொண்டது. அம் மன்னரின் அரசு வீற்றிருக்கைக ளெல்லாம் நகர்கள். அமைச்சரும் படைமறவரும் அவருக்குத் துணையா யிருந்தனர்.

மருதநிலக் குடியிருப்புப் போன்றே, முல்லை குறிஞ்சிநிலக் குடியிருப்புகளும் ஆட்சியில் ம் மாறுதலடைந்தன. அதாவது, தனியூராட்சி போய்க் கூட்டூராட்சி தோன்றிற்று. படைத்துணை யின்மையாற் குறுநில வாட்சி தோன்றவில்லை. இவ் வாட்சி மாற்றம் பண்டமாற்று, விழாக் காண்டல், வேட்டையாடல் வேட்டையாடல் முதலிய தொடர்புகளால் ஏற்பட்டது. ஆயின், மருதம்போல் நாகரிக வளர்ச்சி யடையவில்லை. இதற்கு நில அமைப்பே அடிப்படைக் கரணியம். அதனால், நகரங்களுந் தோன்றவில்லை; ஊர்ப் பெயர்களும் வேறுபட்டன. மருதநிலத்து ஊரே ஊரெனப்பட்டது. உர்=உறு. உறுதல் = பொருந்துதல். உர்-ஊர். உழவுத்தொழிலே நிலத்தொடு பொருந்தி நிலையாக வாழ ஏதுவாயிற்று. அதனால், சிற்றூர் பேரூரும், பேரூர் மூதூரும் ஆயின. நகரங்கள் பெருமைபற்றிப் பேரூர் என்றும், முதுமைபற்றி மூதூர் என்றும் சொல்லப்பட்டன.

66

வாணன் பேரூர்"

66

அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்

99

(மணிமே.3:123)

(சிலப்.பதி.39)

முல்லைநிலத்திற் கால்நடைகட்குப் புல்வெளி தேடி அடிக்கடி டம் ம் பெயரவேண்டி யிருந்தது. அதனாற் கட்டை மண்மேற் கூரை வேய்ந்து, உயரமின்றித் தாழ்வான வீடுகளைக் கட்டிக்கொண்டனர். அதனால் அந் நிலத்தூர் பாடி எனப்பட்டது. படுத்தல்=தாழ்தல், தாழ்வாயிருத்தல். படு-பாடு-பாடி. இனி, படு-படி-பாடி என்றுமாம். வீடுகள் செறிந்திருந்ததனால், அவ் வூர் சேரி எனவும் பட்டது.