பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




44

குறிஞ்சிநிலக் குடியிருப்பு நிலம்பற்றிக் குறிச்சி யெனப்பட்டது. குறிஞ்சி-குறிச்சி. சிறுசிறு கூட்டமாக வாழ்ந்ததனால் சிறுகுடி யெனவும் பட்டது. குடியென்றது குடித் தொகுதியை. குடி வட்ட மான சிறு வீடு.

பொற்கால மொழி, பகுசொன்னிலை (Inflexional Stage) கடந்து தொகுநிலை (Synthetic Stage), பல்தொகுநிலை (Polysynthetic Stage) என்ற நிலைகளும் அடைந்திருத்தல் வேண்டும்.

முறையெண்

1.

நிலை அசைநிலை: (1) இயல்நிலை (2) திரிநிலை

எடுத்துக்காட்டு

ஏ, உள், பல்

2.

புணர்நிலை

3.

4.

5.

ம்

கொளுவுநிலை

பகுசொன்னிலை

தொகுநிலை

6.

பல்தொகுநிலை

யா, உண் (உட்கொள்).

(பர் -பரு பெரு).

-

பெருமகன், செய்கை, நல்லது.

வர் + ஒத்து + இ = வருத்துவி, சுள் சுண் + அம் + பு

-

சுண்ணம்பு - சுண்ணாம்பு.

(பெருமகன்-) பெம்மான், பிரான்; செய்கை, நன்று.

ஏ + ஒன்

=

ஏன் - யான். ஏ + உம் = ஏம் - யாம்.

எல் + அ + உம் = எல்லவும் - எல்லாம், செய் + அல் + ஒண் + அர் + இது + அ = செய்ய அ வொண்ணாத-செய்யொணாத

- செய்யொணா.

=

அரிது - அருது = கூடாது. செய்யருது = செய்யக்கூடாது.

புதுக் கற்காலத்தில், பெயர்வினை யென்னும் சொல் வேறு பாடும், தன்மை முன்னிலை படர்க்கை யென்னும் இடவேறுபாடும், ஒருமை பன்மை யென்னும் எண் வேறுபாடுமே இருந்திருந்து, பொற்காலத்தில் இருதிணையும் ஐம்பாலும் தோன்றியிருத்தல் வேண்டும். மருதநிலச் சொற்களால் சொல்வளம் பெருகிற்று.