பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




47

நிலத்து உப்பினும் கடலுப்பே சிறந்ததாகையாலும், செம்படவரும் உமணரும் மருதத்தை யடுத்த நெய்தல் நிலத்தில் தங்கி, முறையே மீன் பிடித்தும் உப்பு விளைத்தும் வருவாராயினர். அவர் குடியிருப் பிற்குக் குப்பம் என்றும் துறை யென்றும் பெயர்.

பழங் கற்காலத்திற் படவெழுத்தும் (Pictograph), புதுக் கற் காலத்திற் கருத்தெழுத்தும் (Ideograph) தோன்றியிருத்தல் வேண்டு மென்பது முன்னரே கூறப்பட்டது. படவெழுத்தாவது, ஒரு செய்கை யைப் படமாகவே வரைந்து காட்டுவது. கருத்தெழுத்தாவது, ஒவ்வொரு கருத்தையும் படவெழுத் தடிப்படையில் ஒரு குறியாற் குறிப்பது.

பொற்காலத்தில் அசையெழுத்துத் தோன்றியிருத்தல் வேண்டும். அசையெழுத்தாவது (Syllabary), உயிர்மெய்யை உயிரும் மெய்யுமாகப் பிரிக்காமல் தனியெழுத்தாக எழுதுவது.

பழங் கற்காலத்தில் பத்துவரையும், புதுக் கற்காலத்தில் நூறு வரையும், பொற்காலத்தில் ஆயிரம்வரையும், குமரி மாந்தர் எண்ணத் தெரிந்திருக்கலாம்.

கூட்டூராட்சி நிலையில், மருதநிலத் தலைவன் ஊரன், மகிழ்நன் (மகிணன்) என்றும், முல்லைநிலத் தலைவன் அண்ணல், தோன்றல், குறும்பொறை நாடன் என்றும், குறிஞ்சிநிலத் தலைவன் வெற்பன், சிலம்பன், பொருப்பன் என்றும், நெய்தல்நிலத் தலைவன் துறைவன், சேர்ப்பன், கொண்கன், மெல்லம் புலம்பன் என்றும் பதவிப்பெயர் பெற்றிருந்தனர். மகிழ்நன் என்பது, மருதநிலத்து ஆடல்பாடலைக் கண்டுங் கேட்டும் பிற இன்பங்களை நுகர்ந்தும் மகிழ்வுற்றவன் என்பதை யுணர்த்தும். குறுநில வாட்சிநிலையில், அரசர் அனைவரும் மன்னர் எனப்பட்டனர்.

3. செம்புக்காலம் (Copper Age)

(தோரா. கி. மு. 30,000-15,000)

பொன்கிடைப்பு வரவரக் குன்றியதாலும், அணிகலன்கட்கும் உண்கலங்கட்கும் குடிகலங்கட்குமே பொன்னைப் பெரிதும் பயன் படுத்தியதாலும், நாளடைவிற் பல கருவிகளையுங் கலங்களையும் செய்தற்கேற்ற செம்பைக் கண்டுபிடித்தனர்.

குய்க்கொள் கொழுந்துவை நெய்யுடை யடிசில்

மதிசேர் நாண்மீன் போல நவின்ற

சிறுபொன் நன்கலஞ் சுற்ற இரீஇக்

கேடின் றாக பாடுநர் கடும்பென