பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




49

துவர் (சிவப்பு) - தெ. தொகரு, க.தொகர். துவர் (துவர்ப்பு) - வ. துவர.

துவர்த்தல் = 1. சிவத்தல். “துவர்த்த செவ்வாய்" (கம்பரா. நீர்விளை.13).2. துவர்ப்பாதல்.

துவர்ப்பு = 1. அறுசுவைகளுள் ஒன்று (பிங்.)

2.பத்து (துவர்ப்புப் பொருட்டொகை) (தைலவ.தைல.135) துவராடை = காவியாடை.“அந்துவ ராடைப் பொதுவனொடு”

=

துவர்க்கட்டி = காசுக்கட்டி.

(கலித்.102:35)

துவர்க்கண்டல் = செந்தாழை (தைலவ.தைல.135)

துவர்க்காய் = பாக்கு. “துவர்க்காயொடு சுக்குத்தின்னும்”

(தேவா.660:10.) துவர்ப்பூ = வாடிச்சிவந்த பூ“தன்றலை தங்கிய துவர்ப்பூ வேற்றி” (பதினொ. திருக்கண். மறம்.நக்.61)

துவர்வலியுறுத்தி

=

துவர்ப்பு மருந்து (Astringent tonic)

துவர் - துவரம் = துவர்ப்பு (பிங்.). துவரம் - வ. துவர.

துவர் - துவரி = 1.இலவம்பூ.

“துவரிக் கனிவாய் நிலமங்கை’

وو

2.காவிநிறம்.

66

“துவரி யாடையர் மட்டையர்”

துவரித்தல் = செந்நிறமூட்டுதல்.

66

“துவரித்த வுடையவர்க்கும்”

(திவ்.பெரிய தி.8:8:9)

(திவ்.பெரிய தி.2:1:6)

(திவ்.பெரிய தி.5:6:8)

கட்டிய செப்புக்

துவர்-துவரை = 1. துவரம் பயறு. 2.துவரஞ்செடி. 3.காட்டத்தி.

4.கருந்துவரை. 5.செம்புருக்கி வார்த்துக்

கோட்டை மதில்.

“செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை

யுவரா வீகைத் துவரை யாண்டு"

7.கண்ணன் ஆண்ட துவாரகை. வ. த்வாரகா.

துவரஞ்சம்பா=ஒரு நெல்வகை.

(புறம்.201)

துவரைக்கோமான்=இடைக்கழகப் புலவராகச் சொல்லப்படும்

ஒருவர் (இறை.கள. உரை).