பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




50

துவரைப்பதி - வ.த்வாரவதீ.

துவர் - துகர் - துகிர் = 1. பவழம்.

"பொன்னுந் துகிரு முத்தும்”

2.பவழக்கொடி

“செந்துகிர் படருந் திரைக்கடல்’

(கல்லா. முருக. வண.) துகிர் - தெ., க., து. தொகரு.

துகிர்த்தாளி = பவழமல்லிகை (மலை.)

-

துகிர் - துகில் = 1 செந்நல்லாடை.

1

"பட்டுந் துகிலு முடுத்து”

2.

செந்துணிக்கொடி(பிங்.).

செந்துணிக்கொடி

CC

துகில்

(புறம்.218)

(நாலடி.264)

துகிலிகை

=

புரிசைமேற் புனைந்தவா ணிலாநெடுந் துகிலிகை” (கந்தபு.திருநகர.20)

தும்பரம் - தம்பரம் - தாம்பரம் = செம்பு (பதார்த்த.1170) தாம்பரம் -வ. தாம்ர.

தம்பரம் - தம்பர் = வெற்றிலை தின்று சிவந்த எச்சில் (மாறனலங்.470, உதா.)

தம்பரம்=தம்பலம்=1. வெற்றிலை தின்று சிவந்த எச்சில். “தில்லைநல் லார்பொதுத் தம்பலங் கொணர்ந்தோ" (திருக்கோ.396) தெ.தம்ம. 2.வெற்றிலை பாக்கு. “தையால் தம்பலந் தின்றியோ’ (கலித்.65) 3. தம்பலப் பூச்சி.

தம்பலம் - வ. தாம்பூல.

தம்பலப் பூச்சி = தம்பலம்போற் சிவந்த மூதாய்.

தம்பலம் - தம்பல் = வெற்றிலை தின்று சிவந்த எச்சில். "வெள்ளிலைத் தம்பல்”

தம்பலம் - தம்பலை

முட்செடி.

=

(கம்பரா. வரைக்கா.49)

சிவந்த இலந்தைப் பழம், அது பழுக்கும்

துமர் - தமர் தமரை = தாமரை = செம்முளரி.

-

தாமரை என்னுஞ் சொல் இன்று தன் சிறப்புப் பொருளிழந்து, பொதுப்பொருளில் வழங்குகின்றது. அதனால், செம்முளரியைக் குறிக்கச் செந்தாமரை என்று மிகைபடக் கூறலாகச் சொல்ல வேண்டியுள்ளது. இது, அரைஞாண் கொடி, குளிர்ந்த தண்ணீர் என்பன போன்ற வழு வழக்கே.

-

தாமரை வ. தாமரஸ.