பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




52

நெய்தல்நில மாந்தர் கட்டுமரம், திமில், படகு முதலிய கலங்களைச் செலுத்தி ஆழ்கடலில் மீன் பிடித்ததொடு, சலங்குகளிற் சென்று முத்துக் குளித்தும் பவழத் தீவுகளினின்று பவழங் கொணர்ந் தும் தம் வாழ்க்கையை வளம்படுத்தினர். கிளிஞ்சில் முத்துமாலை களைச் செல்வரும், வலம்புரி இடம்புரி முத்துமாலைகளை அரசரும் வாங்கியணிந்தனர். சங்கு வளையலும் பவழமாலையும் பெண்டிரால் விரும்பியணியப்பட்டன. சிப்பி நீற்றுச் சுண்ணம், சிறந்த வெண்

சுதையாகப் பயன்படுத்தப்பட்டது.

ஒரு

ஒருவன் ஒருத்தியொடு மறைவாகக் கூடிய பின் அவளொடு கூடவில்லை யென்று மறுத்துரைத்தலும், அவளைக் கைவிடுதலும், ஒருவன் ஒருத்தியொடு வலிந்து கூடுதலும் ஆகிய பொய்யும் ஒழுக்கக் கேடும் பலரிடைத் தோன்றியபின், பெற்றோரின் இசைவு பெற்றே பெண்ணைக் கொள்ளுமாறும், இருபாலாரும் வெளிப் படையாகக் கற்புடன் ஒழுகுமாறும், விழாவொடு கூடிய கரணம் என்னும் திருமணச் சடங்கைப் பெரியோர் ஏற்படுத்தி வைத்தனர். பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப.

66

CC

(தொல்.1011)

99

கற்பெனப் படுவது கரணமொடு புணரக் கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்

(தொல்.1091)

கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே.

திருமணக் கரணம் பெரும்பாலும் பின்வருமாறு நடந்தது.

66

உழுந்துதலைப் பெய்த கொழுங்களி மிதவை பெருஞ்சோற் றமலை நிற்ப நிரைகால் தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி மனைவிளக் குறுத்து மாலை தொடரிக் கனையிருள் அகன்ற கவின்பெறு காலைக் கோள்கால் நீங்கிய கொடுவெண் டிங்கள் கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர் பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்

99

5

முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்

10

புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று வாலிழை மகளிர் நால்வர் கூடிக் கற்பினின் வழாஅ நற்பல வுதவிப்

பெற்றோற் பெட்கும் பிணையை யாகென நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி

15