பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




55

ஆறலைத்தலையுஞ் சூறைகோடலையுமே தம் குலத் தொழிலாகக் கொண்டுவிட்டனர். கொடுவறட்சி கொள்ளைக்கே தூண்டும்.

ங்ஙனம், தமிழகம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணைப் பாகுபாடுற்றது. திணை ஐந்தாயினும்,

நிலையான நிலம் நான்கே யாதலால், ஞாலம் நானிலம்

என்னப்பட்டது. பாலைநிலத் தலைவர் விடலை, கோ, வேள், மீளி, காளை எனப் பல்பெயர் பெற்றனர்.

மருதநிலத்து ஊர்களிலேயே நெல் விளைந்ததனால், பாலை நிலந் தவிர மற்ற முந்நில மாந்தரும் தத்தம் நிலத்துச் சிறப்புப் பண்டங் களை அங்குக் கொணர்ந்து நெல்லிற்கு மாறினர்.

66

கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன் மான்றசை சொரிந்த வட்டியும் ஆய்மகள் தயிர்கொடு வந்த தசும்பு நிறைய

ஏரின் வாழ்நர் பேரி லரிவையர்

குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல் முகந்தனர் கொடுப்ப வுகந்தனர் பெயரும் தென்னம் பொருப்பன் நன்னாட் டுள்ளும்

99

(புறம்.33:1-7)

உமணர், நெய்தல் நிலத்து உப்பளங்களினின்று உப்பை மாட்டு வண்டிகளில் ஏற்றிக்கொண்டு வந்து, மற்ற நிலத் தூர்களில் விற்றனர்.

CC

கானல்

கழியுப்பு முகந்து கன்னாடு மடுக்கும்

ஆரைச் சாகாட் டாழ்ச்சி போக்கும்

66

உரனுடை நோன்பகட் டன்ன

ஈத்திலைக் குப்பை யேறி யுமணர்

உப்பொ யொழுகை யெண்ணுப மாதோ’

99

66

விற்பனை பெரும்பாலும் பண்டமாற்றாகவே நடந்தது.

முள்ளெயிற்றுப் பாண்மகள் இன்கெடிறு சொரிந்த அகன்பெரு வட்டி நிறைய மனையோள்

அரிகாற் பெரும்பயறு நிரைக்கும் ஊர

99

கெளிறு

கெடிறு

=

முள்ளுள்ள ஒருவகை மீன்.

66

வலைவல் பாண்மகன் வாலெயிற்று மடமகள் வராஅல் சொரிந்த வட்டியுள் மனையோள்

(புறம்.60)

(புறம்.116)

(ஐங்.47)

99

யாண்டுகழி வெண்ணெல் நிறைக்கும் ஊர

(ஐங்.48)