பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




56

மருதத்திற்கும் குறிஞ்சிக்கும் இடைப்பட்ட முல்லைநிலத்து டைச்சி, ச்சி, ஆனைந்தை மருதநிலத்தில் நெல்லிற்கு விற்றதொடு குறிஞ்சிநிலத்தில் பாலெருமைக்கும் ஆவிற்கும் எருமைக் கடாரிக்கும் மாறி வந்தாள்.

ஆனைந்து என்பன பால் தயிர் மோர் வெண்ணெய் நெய்.

66

குறுநெறிக் கொண்ட கூந்த லாய்மகள் அளைவிலை யுணவிற் கிளையுட னருத்தி நெய்விலைக் கட்டி பசும்பொன் கொள்ளாள் எருமை நல்லான் கருநாகு பெறூஉம் மடிவாய்க் கோவலர் குடி

(பெரும்பாண்.162-7)

பாலைநில மாந்தர் வழிப்போக்கரைக் கதறப் புடைத்துப் பொருள் பறித்ததையும், பொருளொடு வராதவரின் கைகால்களைத் துண்டித் ததையும், ஆநிரை கவர்தலும் ஆறலைத்தலுஞ் செய்யாது அறஞ்செய்யின் மறங்கெடும்' என்னும் அவர் கொள்கையையும் பின் வருபவற்றால் அறியலாம்.

66

66

அத்தஞ் செல்வோ ரலறத் தாக்கிக்

கைப்பொருள் வௌவுங் களவோர் வாழ்க்கைக் கொடியோர்'

99

(பெரும்பாண்.39-41)

வலிமுன்பின் வல்லென்ற யாக்கைப் புலிநோக்கிற் சுற்றமை வில்லர் சுரிவளர் பித்தையர்

அற்றம்பார்த் தல்குங் கடுங்கண் மறவர்தாம் கொள்ளும் பொருளில ராயினும் வம்பலர்

66

துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்துயிர் வௌவலிற் புள்ளும் வழங்காப் புலம்புகொள் ஆரிடை

99

(கலித்.4)

கல்லென் பேரூர்க் கணநிரை சிறந்தன வல்வில் எயினர் மன்றுபாழ் பட்டன

மறக்குடித் தாயத்து வழிவளஞ் சுரவாது அறக்குடி போலவிந் தடங்கினர் எயினரும்

99

பாலைநில மகளிரும் மறஞ்சிறந்தவர் என்பதை,

66

யானை தாக்கினும் அரவுமேற் செலினும் நீனிற விசும்பின் வல்லேறு சிலைப்பினும் சூன்மகள் மாற மறம்பூண் வாழ்க்கை

வலிக்கூட் டுணவின் வாட்குடி

என்பதால் அறியலாம்.

99

(சிலப். வேட்டு.12-15)

(பெரும்பாண்.134-7)