பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




57

பொற்காலத்திற் குறுநில மன்னவரா யிருந்தவருட் சிலர் செம்புக் காலத்திற் பெருநில மன்னராயினர். முன்னவர் மன்னர் என்றும், பின்னவர் கோக்கள் என்றுஞ் சொல்லப்பட்டனர்.

"கோக்கண்டு மன்னர் குடைகடல் புக்கிலர் கோகனகப்

பூக்கண்டு கொட்டியும் பூவா தொழிந்தில"

என்னும் தனிப்பாடலால், மன்னனினும் பெரியவன் கோ என்பதை அறிக. கோ என்பது கோவன் என்பதன் மரூஉ. என்பதன் மரூஉ. கோக்களை (ஆக்களை)க் காக்கும் ஆயன் போல மக்களைக் காப்பவன் அரசன் என்பது கருத்து. இவ் வொப்புமை பற்றியே, ஆயன் கோல்போல் அரசனும் ஒரு கோலைக் கையிற் கொண்டான். ஆட்சி நேர்மையா யிருக்க வேண்டுமென்பதைக் காட்டவே, நேரான கோல் கொள்ளப் பட்டது. கோல் ஆட்சியைக் குறிக்குஞ் சின்னமாதலால், முறையான ஆட்சி செங்கோல் என்றும், முறைதவறிய ஆட்சி கொடுங்கோல் என்றும் சொல்லப்பட்டன. கொடுமை வளைவு. செம்மை நேர்மை. கோன் என்னும் தென் சொல்லே துருக்கியிற் ‘கான்' என்று திரிந்ததாகக் கால்டுவெலார் கூறுவர்.

கோவன்-கோன்-கோ = அரசன்.

கோவன், கோன் என்னுஞ் சொற்கள் இன்றும் ஆயனையுங் குறித்தல் காண்க. கோன் என்னுஞ் சொல் ‘ஆர்’ என்னும் உயர்வுப் பன்மை யீறு பெற்றுக் கோனார் எனவும் வழங்கும்.

பாலைநிலந் தவிர மற்ற நான்கு நிலங்களுள் ஒன்றும் பலவுங் கைக்கொண்டவர் கோக்களாவர். அமைச்சர், படைத்தலைவர், பூசகர், தூதர், ஒற்றர் என்னும் ஐம்பெருங் குழுவார் அவருக்கு ஆட்சித் துணையாயிருந்தனர்.

ஐந்திணைகளுந் தோன்றியபின், முதற்கண் குறிஞ்சியில் வேட்டையாடுங் குறவரும், முல்லையில் முந்நிரை வளர்க்கும் இடையரும்,மருதத்தில் உழுதொழிலைச் சிறப்பாகச் செய்யும் உழவரும், பாலையில் வழிப்பறித்துக் கொள்ளையடிக்கும் மறவரும், நெய்தலில் மீன்பிடிக்கும் படவரும், ஆகப் பெரும்பாலும் ஒவ்வொரு வகுப்பாரே வாழ்ந்திருப்பர்.

ஒவ்வொரு திணைநிலத்திலும் உள்ள ஒவ்வொரு மக்கட் குடியிருப்பிலும், அடக்கியாளவும் வழக்குத் தீர்க்கவும் ஒரு தலைவன் தோன்றியிருப்பன். அவன் இற்றை நாட்டாண்மைக்காரன்போல் பிறர் செய்யுந் தொழிலையே செய்திருப்பன். தெய்வ வணக்கம் அல்லது அச்சம் இயற்கைப் பண்பாதலால், தலைவனுக்குப் பின் ஒரு பூசகன் அல்லது தேவராளனுந் தோன்றியிருப்பன். அவர்க்குமுன்,