பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




58

கராகப்

மருதநிலப் பேரூர்களில் பண்டமாற்றியர் அல்லது வணிகர்தோன்றியிருப்பர். ஆண்டுதோறும் பல கூலங்களும் புதிதாகவும் ஏராளமாகவும் விளைந்த தால், முந்தின ஆண்டில் மீந்துபோன கூலங்களை வாங்கவும், அவற்றிற் கீடாக உழவர்க்கு வேண்டிய பிறநிலத்துப் பொருள்களைக் கொண்டுவந்து தரவும், உழவரினின்றே ஒருசிலர் வணி பிரிந்திருத்தல் வேண்டும். “யாண்டுகழி வெண்ணெல்” என்று ஐங்குறுநூற்றுப் பாடல் கூறுவதை நோக்குக. "ஒன்றிரண்டாம் ம் வாணிகம்" என்பதும் வணிக முயற்சியை ஊக்கி யிருத்தல் வேண்டும். வணிகருக்குப்பின் பல்வேறு கைத்தொழிலாளர் படிப்படியாகத் தோன்றலாயினர். நாகரிகமும் அரசியலும் வணிகமும் வளர வளர, நூற்றுக்கணக்கான பணிகளும் அலுவல் களும் புதிதுபுதிதாக ஏற்பட்டன. அறிவு வளர்ச்சி யடைந்ததனால், பூசகர் கல்வி கற்பிக்கும் ஆசிரியத் தொழிலும் மேற்கொண்டனர். உழவு, வணிகம், காவல், கல்வி என்னும் நாற்பெருந் தொழில்பற்றி, மருதநில மக்கள் உழவர், வணிகர், அரசர், பார்ப்பார் என நால்வகுப்பாராய் அமைந்தனர். பதினெண் கைத்தொழி லாளரும் உழவர்க்குப் பக்கத் துணைவராகக் கருதப்பட்டதனால், அவருள் அடக்கப்பட்டனர்.

பண்ணியம் = பண்ணப்பட்ட பொருள், விற்பனைப் பண்டம். (மதுரைக்.405)

-

பண்ணியம் - பண்ணியன் - பண்ணிகன் - பணிகன் வணிகன் = பல பண்டங்களை விற்பவன். வணிகன் வாணிகன்.

-

பார்ப்பான் = நூல்களைப் பார்ப்பவன். இது 'அன்' சாரியை அல்லது ‘அனன்’ ஈறு பெற்றுப் பார்ப்பனன் என்றும் நிற்கும். முக்கால வினைமுற்றும் இங்ஙனம் ஈறு கொள்ளும்.

எ-டு.

பார்த்தனன் பார்க்கின்றனன்

பார்ப்பனன்

இறந்த காலம்

நிகழ்காலம்

எதிர்காலம்

“படைப்பனர்” (சிலப்10:134), “விரைவனன்" (புறம்.150) என்னும் எதிர்கால வினைமுற்றுகளை நோக்குக. பார்ப்பனன் என்பது பிராமணன் என்னும் சொல்லின் திரிபன்று. கல்வித்தொழில் செய்யும் ஆசிரியரும் சமய குரவரும் போன்ற தமிழரையெல்லாம் பார்ப்பாரென்றே சொல்ல வேண்டும். பிராமணரை இச் சொல்லாற் குறிக்க வேண்டின், ஆரியப் பார்ப்பார் (அல்லது பார்ப்பனர்) என்று அடைகொடுத்தே கூறவேண்டும்.

அரசர் என்னுஞ் சொல் பின்னர் விளக்கப்படும்.