பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6. (எருதுகொண்டு உழும்) உழவு. "பாண்டியஞ் செய்வான் பொருளினும்" (கலித். 136)

63

"

பாண்டி - பாண்டில் = 1. வட்டம். "பொலம்பசும் பாண்டிற் காசு" (ஐங்.310). 2. வட்டக்கட்டில். "பேரள வெய்திய பெரும் பெயர்ப் பாண்டில்" (நெடுநல். 123). 3. வட்டத்தோல். "புள்ளி யிரலைத் தோலூ னுதிர்த்துத் தீதுகளைந் தெய்திய திகழ்விடு பாண்டில்" (பதிற். 74), 4. வட்டத்தாளம். "இடிக்குரன் முரச மிழுமென் பாண்டில்" (சிலப்.26:194), 5. வட்டக் கண்ணாடி. ஒளிரும்..... பாண்டில்" (பு.வெ.6:12) 6. வட்டக்கிண்ணி. பாண்டி லெடுத்த பஃறாமரை கீழும் பழனங்களே" (திருக்கோ.249). 7. விளக்குத் தகழி (பிங்.). 8. தேர்வட்டை (சிலப்.12:168, உரை), 9. இருசக்கர இருசக்கர வண்டி. வையமும் பாண்டிலும்"(சிலப்.14:168), 10. குதிரை பூட்டிய தேர் (திவா.). 11. நாடு . ஒ.நோ: மண்டலம், வட்டாரம். 12. எருது, காளை. காளை மறம் விஞ்சியதாதலின், போர்மறவன் காளை யெனப்

பட்டான்.

காளை =1. இளவெருது. 2. கட்டிளம் பருவத்தினன் (திவா.). 3. பாலைநிலத் தலைவன்(திவா.). 4. போர் மறவன். "உரவுவேற் காளையும்"(புறம்.334).

காளை மறம் விஞ்சியது மட்டுமன்று, கற்பாறையிலும் ஆற்று மணலிலும் சேற்று நிலத்திலும் மேட்டிலும் பள்ளத்திலும் பொறைவண்டியை "மருங்கொற்றி மூக்கூன்றித் தாள் தவழ்ந்து" இழுத்துச் செல்லுங் கடைப்பிடியுமுள்ளது. அதனால்,

66

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பா டுடைத்து

என்றார் திருவள்ளுவர்.

66

(குறள்.624)

அச்சொடு தாக்கிப் பாருற் றியங்கிய

பண்டச் சாகாட் டாழ்ச்சி சொல்லிய வரிமணன் ஞெமரக் கற்பக நடக்கும் பெருமிதப் பகட்டுக்குத் துறையு முண்டோ

99

(புறம்.90)

என்றார் ஔவையார்.

அரசன் போர்மறமும் ஆட்சித்திறனும் ஒருங்கே யுடையவன் என்பதை யுணர்த்தற்கு, குமரிநில முதல் தமிழ வேந்தன் பாண்டியன் எனக் குடிப்பெயர் பெற்றான். செழியன், வழுதி, மாறன் முதலிய குடிப்பட்டங்களும் பின்னர்த் தோன்றின. பாண்டிநாடு வெப்ப