பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




70

வட்டம். “செஞ்ஞாயிற்று ..... பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்” (புறம். 30). 8. பார்நிலம் “கடல்சூழ் மண்டிலம்” (குறுந்.300).9. வட்டமா யோடுகை. “செலவோடு மண்டிலஞ் சென்று” (பு.வெ.12 வென்றிப்.14). 10 இருகாலும் வளைத்து நிற்கும் நிலை. "இருகால் மண்டலத் திடுதல் மண்டிலநிலை" (பிங். 6:369).

மண்டலம் வ.மண்ட

-

ல.

மண்டலம் என்னும் சொல் மட்டுமன்று, வட்டம் என்னும் சொல்லும் வடசொற் றிரிபாகவே சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகரமுதலியிற் காட்டப்பட்டுள்ளது.

வல் - வள் - வண்டு. வட்டு - வட்டம்.

வட்டம் வட்ட(பிரா.) - வ்ருத்த (வ.). L.verto (turn).

-

-

இத் திரிபைத் தலைகீழான வ்ருத்த வட்ட - வட்டம் என் று காட்டியுள்ளது செ.ப.க.த. அகரமுதலி. இதைத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியரோ கல்வியமைச்சரோ கடுகளவுங் கவனிப்பதே யில்லை.

மண்டலம், வட்டம் என்னும் இருசொற்கும் அடிவேர் முல் என்பதென்றும், வடமொழி தமிழ்த்திரிபே யென்றும், என் செந்தமிழ்ச் சொற்பிறப்பிய லகரமுதலியில் ஐயந்திரிபற விளக்கப் பெறும்.

உழவு, கைத்தொழில், வணிகம், அரசியல் முதலியவற்றால் உலகியல்அறிவு பலதுறையிலும் வளர்ந்து வந்தது. அதன் விளைவாக, மதத்துறையிலும் பல மாறுதல்கள் நேர்ந்தன. ஐந்திணை நிலத்தாரும், ஐம்பூதங்களையும் நன்மையுந் தீமையும் செய்யும் உயிரிகளையும் இறந்த முன்னோரையும் போரிற் பட்ட பெருமறவரையும் பேய் களையும் பொதுவாக வணங்கி வந்தாலும், ஒவ்வொரு திணை நிலத்திற்கும் ஒவ்வொரு தெய்வம் சிறப்பாக நிலைத்துவிட்டது.

குறிஞ்சிநிலத்தில் முதற்கண் தோன்றி, ஏனை நிலங்களிலும் மட்டுமன்றி உலகமுழுதும் பரவிய முதல் தெய்வம் தீயாகும். அதனால், தெய்வம் என்னும் பொதுப்பெயரே தீயின் பெயரினின்றுதான் திரிந்தது.

தேய்தல் = மரங்கள் அல்லது கற்கள் உராய்தல், உராய்ந்து தீப் பற்றுதல்.

தேய் - தேயு = உராய்ந்து பற்றும் நெருப்பு. தேய்தேயு

தேயு-தேசு=நெருப்பின் ஒளி. தேசு-வ.தேஜஸ். தேய்-தே=தெய்வம் (பிங்.). "தேபூசை செய்யுஞ் சித்திர சாலை" (சிவரக.நைமிச.20). 2. நாயகன் (இலக்.81).