பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




71

66

தே-தீ=1. நெருப்பு. “வளித்தலைஇய தீயும்” (புறம்.2). 2.விளக்கு. “தீத்துரீஇ யற்று”, (குறள். 929). 3.வயிற்றுத்தீ, கடும்பசி. “வயிற்றுத்தீத் தணிய (புறம். 74). 4.சினத்தீ, சினம். “மன்னர்தீ

யீண்டுதங் கிளையோடு மெரித்திடும்" (சீவக.250). 5. தீயின் தன்மை, தீமை.“தீப்பால தான்பிறர்கட் செய்யற்க”(குறள். 206). 6. நஞ்சு. “வேகவெந் தீநாகம்" (மணிமே.20:98). 7. நரகத்தீ. அழுக்காறு....தீயுழி யுய்த்து விடும்” (குறள். 168). ஒ.நோ: தேம்பால் - தீம்பால்.

66

தேய் - தேய்வு. தேவு = க. தெய்வம் (பிங்.) “நரகரைத் தேவுசெய் வானும்” (தேவா. 699:2). 2. தெய்வத் தன்மை.

6

தேவு - தேவன் = கடவுள். “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” (திருமந்.104). தேவன் - வ. தேவ.

தேய்வு - தெய்வு

-

தெய்வம் = 1. வணங்கப்படும் பொருள். “தெய்வ முணாவே" (தொல்.பொருள்.18). 2. தெய்வத் தன்மை. 3. தெய்வத்தன்மையுள்ளது. 4. கடவுள். 5. கடவுள் ஏற்பாடு, ஊழ். தெய்வம் வ. தைவ.

-

தேய் என்னும் மூலத்திலுள்ள யகரமெய், தெய்வம் என்னுஞ் சொல்லிலு மிருத்தல் காண்க.

குறிஞ்சி நிலத்தார், 'தெய்வம் தீவடிவினது' அல்லது தீயொத்தது என்னுங் கருத்தினரேனும், தெய்வம் அல்லது தேவன் என்பது பொதுப்பெயராகிவிட்டதனால், தீயைப்போற் சிவந்தவன் என்னுங் கருத்தில் தம் தேவனைச் சேயோன் என்றனர். அவன் தம்மைப்போல் மறவனாயிருக்க வேண்டுமென்று கருதி, மறத்திற்குச் சிறந்த இளமைப் பெயரால் அவனை முருகன் என்றனர். முருகு இளமை. அழகு என்பது அதன் வழிப்பொருள். தம் படைக்கலமாகிய வேலை யேந்தியும், குறிஞ்சிக்குரிய கடப்ப மாலையை யணிந்தும் இருப்பதாகக் கருதி, வேலன் என்றும் கடம்பன் என்றும் இருபெயர் சேர்த்தனர். மேலெழுந்து விண்ணுலகஞ் செல்ல வுதவுமென்று கருதி, குறிஞ்சிக் குரிய அழகிய பெரும்பறவையாகிய மயிலை முருகனுக்கு ஊர்தியாகக் கொண்டனர். அவன் பிற பெயர்களும் இயல்களும் செயல்களும், என் தமிழர் மதம் என்னும் நூலில் விளக்கப்பெறும்.

முல்லைநிலத்தார், தம் கன்றுகாலிகட்குப் புல்வளரவும் வானாவாரிக் கொல்லையிற் பயிர்கள் விளையவும், இன்றியமையாத மழை பெய்யும் கருமுகிலை அல்லது அது திரளும் நீலவானைத் தம் தேவன் வடிவாகக் கொண்டு, அவனை மாயோன் என்றும் கரியவன் என்றும் மால் என்றும் குறித்தனர்.