பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




72

மருதநிலத்தார், விண்ணுலகக் கொள்கை கொண்டதனால்,

இம்மையிற் சிறந்த நல்வினை செய்யும் பொதுமக்கள் தேவராகவும் வேந்தன் தேவர்கோனாகவும், மறுமையில் விண்ணுலகத்திற் சேர்வர் என்னும் நம்பிக்கையினால், ஒருங்கே விண்ணுலக வேந்தனாகவும் மழைத் தெய்வமாகவுங் கொண்ட தம் தேவனை, வேந்தன் என்றே விளம்பினர்.

நெய்தல் நிலத்தார், கடல்படு செல்வத்திற்கும் நீர்வாணிகத் திற்கும் கடலையே நம்பியிருந்ததனால், கடல் தலைவனே தம் தேவன் எனக் கொண்டு, அவனை வாரணன் என்றனர். வாரணம் = கடல். வாரணன் கடல் தலைவன். வார்தல் = வளைதல். வள்-வர்-வார்- வாரணம். கடல் நிலத்தைச் சூழ்ந்திருப்பதால் வாரணம் எனப் பட்டது. "வளைகடல் வலையிற் சூழ்ந்து" (சீவக.1115). கேடகமும் சங்கும் வாரணம் எனப்படுவதும் வளைந்திருத்தல் பற்றியே. வாரணன்-வ.வருண.கடற்கோவாரணன் (உபதே.உருத். 230).

6

பாலைநிலத்தார் அடிக்கடி ஆறலைத்தும் சூறையாடியும் போரிட்டும் மக்களைக் கொன்று பிணமாக்கியதனால், அப் பிணங் களைத் தின்பதாகக் கருதப்பட்ட கூளிகளின் (பேய்களின்) தலைவியாகிய காளியை, தமக்குப் போரில் வெற்றி தருபவளாகக் கருதி, அவளை அவர் தெய்வமாகக் கொண்டு காவிட்டு வழிபட் னர். பேய்நிறம் கருப்பென்பது பற்றி, அவள் காளி எனப்பட்டாள். கள்-காள்-காளம்-காளி=கருப்பி. அவளை மாயோள் என்பதும் அந் நிறம்பற்றியே. மாமை = கருமை. காளி-வ.காலீ. கருப்பி என்பது உலக வழக்கு.

காளி வணக்கம் அடிப்படையிற் பேய் வணக்கமாயினும், அது தாய் வணக்கமும் கண்ணகிபோலும் கற்புடைத் தேவி வணக்கமுங் கலந்ததாகும். காளியம்மை, கொற்றவை என்னும் பெயர்கள் தாய் வணக்கக் கருத்தைக் காட்டும். கொற்றம்+அவ்வை=கொற்றவை (வெற்றித் தாய்). இனி, அம்மை யென்னும் பெயர் அடையடுக்காது தனித்தும் அவளைக் குறிக்கும். அதனால், அவளால் நேர்வதாகக் கருதப்பட்ட கொப்புள நோய், அம்மை யென்றே பெயர் பெற்றது.

இங்ஙனம் ஐந்திணை வணக்கமும் ஏற்பட்டபின், மருதநிலப் பார்ப்பாருட் சிறந்த அறிஞர் சிலர், பிறவியறுக்கும் வீடுபேற்றுக் கருத்துங்கொண்டு, அப் பேற்றைப் பெறும் சிவநெறி, திருமால்நெறி ஆகிய இரு மதங்களையுங் கண்டனர். குறிஞ்சிநிலத்திலிருந்து ஆய்ந்தவர் சிவநெறியையும், முல்லைநிலத்திலிருந்து ஆய்ந்தவர் திருமால் நெறியையும் கண்டதாகத் தெரிகின்றது. வீடுபேற்று