பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




74

வேண்டும். வெண்பாவும் வஞ்சிப்பாவுந் தோன்றி நால்வகைப் பாவிலும் இலக்கியம் நடைபெற்றிருக்கும். இசை நாடகக் கலை களும் வளர்ச்சியுற்று இலக்கிய விலக்கணம் பெற்றிருக்கும். எழுத்து, சொல், பொருள் என்னும் முக்கூறு தழுவிய பிண்ட விலக்கணமுந் தோன்றி யிருக்கும்.

தமிழர் மீண்டும் வடக்கே சென்று பரவியிருப்பர்.

வடஇந்தியா திரவிடநாடாகவும், நடுவிந்தியா மொழிபெயர்

தேயமாகவும் மாறியிருக்கும்.

மக்கள் பெருகி ஆள்நிலம் மிக விரிவடைந்துவிட்டதனால் பாண்டியன், குமரியாற்றிற்கு வடக்கிற் பனிமலை வரையுள்ள நிலப்பாகத்திற் கீழ்ப்பாதியை ஒருவனும் மேற்பாதியை ஒருவனும் ஆளுமாறு, இரு துணையரையரை அமர்த்தியிருத்தல் வேண்டும். வெள்ளி (வெண்பொன்)

செம்பும் வெள்ளீயமுங் கலந்து உறையென்னுங் கலப்புப் பொன்னம் (metal) அமைத்ததற்கு முன்னோ பின்னோ வெள்ளி அல்லது வெண்பொன் என்னும் பொன்னமும் தமிழகத்திற் கிடைத்துப் பயன்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும். வெண்ணிற மாயிருப்பது வெள்ளி வெள்-வெள்ளி.

"இரும்பல்லாத பொன்னத் தனிமங்களுள் (elements) தலை சிறந்து பயன்படுபவற்றுள் ஒன்றான செம்பு, கற்காலத்தின் பிற் பகுதியில் கி.மு. 8000 போல் புதுக் கற்கால மாந்தனாற் கண்டு பிடிக்கப்பட்டு முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது. செம்பு இயற்கையில் தனிப் பொன்ன நிலையிற் காணப்படுகின்றது. இவ் வியற்கைச் செம்பு புதுக் கற்கால மாந்தன் கல்லிற்கீடாகப் பயன் படுத்திய கருவிப்பொரு ளாகும். அதனின்று அவன் முருட்டுச் சம்மட்டிகளையும் கத்திகளையும் பின்னர் மற்றக் கலங்களையும் அமைத்தான். அதன் சமட்டப்படுந் தன்மையால், அதை வேண்டிய வடிவத்திற்கு அடித்துக் கருவிகளை உருவாக்குவதற்கு மிக எளிதா யிருந்தது. தட்டுவதனாற் செம்பு இறுகிக் கூர்மை மிக்கனவும் நீண்டுழைப்பனவு மான ஓரங்கள் தோன்றின. அப் பொன்னத்தின் பளபளப்பான செம்பட்டை நிறமும் நிலையான தன்மைகளும் அதை மிகுந்த விலைமதிப்புள்ளதாக்கின.”

"இம் முந்து காலத்திற் செம்பிற்காகச் செய்த தேடுகை, யற்கைச் செம்பைக் கண்டுபிடிக்கவும் அதன் வைப்புகளிலிருந்து அதை யெடுக்கவும் வழிவகுத்தது. கி.மு. 4000 ஆண்டுகட்குச் சற்றுப்