பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




75

பின்பு, அப் பொன்னத்தைக் குடியிருப்புத் தீக்களத்தில் உருக்கி வேண்டிய வடிவத்தில் வார்த்துக்கொள்ள முடியுமென்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதன்பின்பு, பொன்னவியற் செம்பிற்கும் செம் புள்ள பாறைக்குமுள்ள உறவும், செம்பு கலந்த மணலிலிருந்து நெருப் பினாலும் கரியினாலும் செம்பைப் பிரித்தெடுக்க முடியுமென்பதும் கண்டுபிடிக்கப்பட்டன. இதனின்று பொன்னவூழி தொடங்கிப் பொன்னக்கலை சிறந்தது." (பொன்னக்கலை வரலாறு பார்க்க).

66

செம்புக் காலத் தொடக்கத்தில் அதன் மாபெரு வளர்ச்சி எகிபதுவில் இருந்திருக்கக் கூடும். கி.மு. 5000 ஆண்டுக் காலத்திலேயே, கல்லறைகளில் இறந்தவர் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்ட படைக் கலங்களும் கருவிகளும் செம்பினாற் செய்யப்பட்டிருந்தன. கி.மு. 3800 போல், சீனாய்த் தீவக்குறை (Peninsula), சினெப்புரு (Snefru) அரசனால் செப்புச் சுரங்கங்கள் நடத்தப்பட்டதைப்பற்றிய திட்ட மான எழுத்தேடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இச் சுரங்கங் களிற் கண்டெடுக்கப்பட்டுள்ள குகைகள், அப் பொன்னத்தைப் பிரித் தெடுக்குங் கலை தூய்மைப்படுத்தலையும் உட்கொண்டதென்பதைக் காட்டுகின்றன. அக் கலை, செம்பைச் சன்னத் தகடுகளாக அடித்து, அவற்றைக் குழாய்களாகவும் பிற வுருப்படிகளாகவும் செய்கிற அளவிற்கு வளர்ச்சியடைந்திருந்தது. அக்காலத்தில் உறை (வெண்கலம்) முதன்முதல் தோன்றிற்று. அம் மூலக்கருவிப் பொருளின் அறியப்பட்ட முதற் பழந்துண்டு, மெதும் (Medum) கூம்புக் கோபுரத்திற் கண்டெடுக்கப் பட்டுள்ள ஒரு வெண்கலப் பாரையாகும். அதன் தோற்றக்காலம் தோரா. கி.மு. 3700 என்று பொதுவாக ஒப்புக்கொள்ளப் பட்டுள்ளது.

"செம்பும் வெள்ளீயமுங் கலந்த அளையம் (alloy) ஆகிய உறை, செம்பினும் உயர்ந்த வன்மை, விறப்பு ஆகிய தன்மைகளை உடையது. இது பொதுவாகப் படைக்கலங்களும் கலையுருப்படிகளும் செய்யுங் கருவிப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டது. இது மிகுதியாகவும் சிறப்பாகவும் பயன்படுத்தப்பட்ட காலம் உறைக்காலம் (Bronze Age) எனப்படும். உறையைப் பயன்படுத்துகை, எகிபதுவிலிருந்து கிரேத்தாவிற்குக் (Crete) கி.மு. 3000-லும், சிசிலிக்குக் (Sicily) கி.மு. 2500-லும், பிரான்சிற்கும் ஐரோப்பாவின் பிறவிடங்கட்கும் கி.மு. 2000-லும், பிரித்தனுக்கும் காண்டினேவியப் பரப்பிற்கும் கி.மு.1800-லுமாக, நண்ணிலக்கடற்கரை நாடுகட்கு விரைந்து

பரவியது.

“கி.மு. 3000 போல் செம்பு செப்பறைத் (Cyprus) தீவில் ஏராளமாக எடுக்கப்பட்டது. அங்குள்ள செம்பு வைப்புகள் மிகப் பெரியன வாகவும் மிகவுயர்ந்த விலைமதிப்புள்ளனவாகவும் இருந்ததனால், அத் தீவின் ஆட்சி, அடுத்தடுத்து எகிபதியர்க்கும் அசீரியர்க்கும்