பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




79

வன்மை பெற்றுவிட்டதனாலும், இலக்கிய விலக்கணங்களும் புலவரு மின்மையாலும், வாய்க்கிசைந்தவாறு பேசி வந்ததனாலும், அவர் மொழி வல்லோசையும் கொச்சைத் தன்மையும் பெற்றுத் திரவிட நிலையடைந்துவிட்டது. அதன்பின் அங்குச் சென்ற தென்னில வணிகர், வடநாட்டில் மொழிபெயர்ந்திருந்ததைக் கண்டனர். அதனால் அந் நாட்டை மொழிபெயர் தேயம் என்றனர். அம் மொழிபெயர் தேயத் தென்னெல்லை வரவரத் தெற்கே தள்ளி வந்தது.

66

குல்லைக் கண்ணி வடுகர் முனையது வல்வேற் கட்டி நன்னாட் டும்பர்

99

மொழிபெயர் தேஎத்த ராயினும்

(குறுந்.11)

66

வில்லலைத் துண்ணும் வல்லாண் வாழ்க்கைத் தமிழ்கெழு மூவர் காக்கும்

மொழிபெயர் தேஎத்த பன்மலை யிறந்தே.'

(அகம்.31)

66

பனிபடு சோலை வேங்கடத் தும்பர்

99

மொழிபெயர் தேஎத்த ராயினும்

(அகம்.211)

66

தொடையமை பகழித் துவன்றுநிலை வடுகர் பிழியார் மகிழர் கலிசிறந் தார்க்கும் மொழிபெயர் தேஎம் இறந்தன ராயினும்

99

(அகம்.295)

வை பிற்காலத்தனவாயினும், முற்காலத்து நிலைமையையும் ஒருவாறு குறிக்கும்.

நிலவாணிகம் போன்றே நீர்வாணிகமுஞ் சிறந்தது. ஆற்றைக் கடக்கப் பரிசல், அம்பி, ஓடம், பள்ளியோடம் முதலிய கல வகைகளும்; கால்வாய் ஆறு கரையோரக் கடல் ஆகியவற்றிற் சரக்குகளைக் கடத்தத் தோணி, பஃறி முதலிய கடத்து வகைகளும்; கடலிலுட் சென்று மீன் பிடிக்கக் கட்டுமரம், மேங்கா, திமில், படகு முதலிய சிறுகல வகைகளும்;முத்துக் குளிக்கச் சலங்குப் படகும்; ஆழ்கடலைக் கடந்து அக்கரை நாடுகளில் வாணிகஞ்செய்து மீளக் கப்பல், நாவாய், வங்கம் முதலிய பெருங்கல வகைகளும் ஏற்பட்டன.

நெய்தல் நிலத்தில் மீன்பிடிக்கும் தொழிலராயிருந்த படவர் அல்லது பரவர் சிலர், நெடுங்கடல் செல்லும் நீர்வணிகராயினர். அவருள் தலைவர் குறுநில மன்னருமாயினர். அவர் குடிப்பெயர் பரதர், பரதவர் எனவுந் திரிந்தது.

படம்=துணி, சீலை, பாய். படம்-படவு = பாய் கட்டிய தோணி. "படவ தேறி” (திருவாச. 43:3).

-

படவு படகு. படவு படவன் படகோட்டி. “படவர் மடமகளிர்' (திருப்போ.சந். பிள்ளைத். முத்.4)