பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




80

படவன் - பரவன் = படகேறி மீன் பிடிப்பவன். “மீன்பல பரவன் வலைகொணர்ந் திட்டனன்” (திருமந். 2031).

பரவன் - பரதவன் =1. மீன் பிடிப்போன். “மீன்விலைப் பரதவர்" (சிலப். 5:25). "திண்டிமில் வன்பரதவர்” (புறம்.24:4). 2. நீர்வணிகன், வணிகன். (சிலப் 5:157, உரை). 3. குறுநில மன்னன். “தென்பரதவர் மிடல்சாய" (புறம். 378).

பரதவன்-பரதன்=1. மீன்பிடிப்போன். “படர்திரைப் பரதர் முன்றில்' (கம்பரா. கார்கால. 74). 2. கடலோடி. “பரதர் மலிந்த பயங்கெழு மாநகர்" (சிலப். 2:2), 3 .வணிகன். “பரத குமரரும்' (சிலப். 5:158).

பரதவர் கடலோடிகளும் (Mariners) சுற்றுக் கடலோடிகளுமா யிருந்ததனால் (Circumnavigators), வடதிசைச் சென்று வடபார் முனையில் சிற்சில வேளைகளில் தோன்றும் வண்ணவொளியைக் கண்டு, அதற்கு வடவை யென்று பெயரிட்டனர்.

வடம் - வட வை = வடதிசை நெருப்பு. "வடவைக் கனலைப் பிழிந்தெடுத்து”

வடவனல் = வட வை.

"அக்கடலின் மீது வடவனல் நிற்க விலையோ'

99

"வெள்ளத் திடைவாழ் வடவனலை

வடவனலம் = வட வை

99

கடுகிய வடவன லத்திடை வைத்தது

(தனிப்பாடல்).

(தாயு. பரிபூர.9)

(கம்பரா. தைலமா. 86)

(கலிங். 402)

வ ம் வடந்தை = வடதிசையிலுள்ளது, வடகாற்று. வடந்தைத்தீ வடவை. “சுடர்ந்தெரி வடந்தைத் தீயும்”

(காஞ்சிப்பு. இருபத். 384).

உத்தர மடங்கல் = வட வை (திவா.). உத்தரம் = வடக்கு. மடங்கல் = கூற்றுவன்போல் உலகையழிக்கும் ஊழித்தீ. உத்தரம் = வடக்கிலுள்ள ஊழித்தீ, வடவை (பிங்.).

பாரின் தென்முனையிலும் வடவை போன்ற ஒளி தோன்று மேனும், ஆரியர் வருகைக்கு முற்பட்ட பண்டைத் தமிழிலக்கியம் முற்றும் அழியுண்டு போனமையால், அதைப்பற்றிய இலக்கியக் குறிப்பும் இறந்துபட்டது.