பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 7.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




81

வடவனல் குமரிநாடு முழுகு முன்னரே கண்டுபிடிக்கப்பட்ட தேனும், அதைப்பற்றிய குறிப்புள்ள இற்றைப் பண்டைநூல் 7ஆம் நூற்றாண்டினதான திவாகரமே. எனினும் வடவையை முதன் முதல் கண்டவன் தமிழனே என்பதற்கு, அதுவே போதிய சான்றாம். னெனின், இற்றை யறிவியல்களைக் கண்ட மேனாட்டாரும் அதை 17ஆம் நூற்றாண்டிலேயே அறிந்தனர். காசந்தி (Gassendi) என்னும் பிரெஞ்சிய அறிவியலார் 1621 ய -ல் அதைக் கண்டு அதற்கு வடவிடியல்' (Aurora Borealis) என்று பெயரிட்டனர். இன்று அப் பெயர்க்கு வடவொளி யென்றே பொருள் கொள்ளப்படுகின்றது,. அதன் விளக்கம்:

ÈI

"A luminous atmospheric phenomenon, now considered to be of electrical character, occurring in the vicinity of, or radiating from, the earth's northern or southern magnetic pole, and visible from time to time by night over more or less of the adjoining hemisphere, or even of the earth's surface generally; popularly called the Northern (or Southern) Lights....... என்று எருதந்துறை ஆங்கிலப் பேரகரமுதலியிற் கூறப்பட்டுள்ளது.

தமிழ்ப்பெயரும் இலத்தீனப் பெயரும் ஏறத்தாழ முற்றும் பொருளொத்திருத்தல் காண்க.

நிலவணிகர் வடக்கிற் பனிமலைவரையும் வடமேற்கில் மேலையாசியாவரையும், நீர்வணிகர் பல்திசையிலுமுள்ள அக்கரை நாடுகள் எல்லாவற்றிலும் பேசப்படும் மொழிகளை யெல்லாங் கேட்டபின், தம் மொழி ஒன்றிலேயே ழகரம் சிறப்பா யொலித்தலைக் கண்டு, அதற்குத் தமிழ் என்று பெயரிட்டிருக்கலாம்.

தம்-தமி=1. தனிமை. “தமிநின்று” (திருக்கோ. 167). 2. ஒப்பின்மை (சங். 81).

தமி + ழ் = தமிழ் (தனிமையாக ழகரத்தைக் கொண்ட மொழி). தமிழ் தமிழம்.

-

தமிழின் இனிமையையும் தமிழப் பண்பாட்டின் சீர்மையையும்

நோக்கி,

66

இனிமையு நீர்மையுந் தமிழென லாகும்” (10:580)

என்றார் பிங்கல முனிவர். அவ் விரண்டும் வழிப்பொருளே யன்றித் தமிழ் என்னுஞ் சொல்லின் வேர்ப்பொரு ளாகா.

சொல்லமைப்பும், செம்மரபும், இலக்கண லக்கண வொழுங்கும், ஐவகைத் தொடை யமைந்த நால்வகைப் பாவின் இன்னோசையும், பொருளிலக்கணமும், சிறப்பாக அகப்பொருட்டுறைகளும், இன்கதை