பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

கொங்குநாட்டு அரசுகள்

அதிகர் (அதிகமானர்), கங்கர், கட்டியர் என்னும் மும்மரபினரும், கடைக்கழகக் காலத்திலிருந்து 13ஆம் நூற்றாண்டுவரை, பேரரசர்க்கு அடங்கியும் அடங்காதும், கொங்குநாட்டின் பகுதிகளை ஆண்டு வந்தனர்.

சோழர் ஆட்சி

இடையிற் பாண்டியர் மீயாட்சி

1004-1303

1265-1300

சோழராட்சிக்குப் பின், கேரளராட்சியும் ஒய்சளராட்சியும் விசயநகர நாயக்கராட்சியும் உடையாராட்சியும் ஐதரலி திப்பு சுலுத்தானாட்சியும் சிச்சிறிது காலம் நடைபெற்றன.

ஆங்கிலராட்சி-1799-1947

இந்திய விடுதலையும் ஒன்றியமும் (Union) (1947).

கேரள நாட்டுச் சிற்றரையங்களும் இந்திய ஒன்றியத்திற் கலந்தன. தமிழ்நாடு-1.பேராய (Congress) ஆட்சி

2. தி.மு.க. (D.M.K) ஆட்சி

மூவேந்தர் ஆரிய அடிமை முதிர்வு

1947 - 67

1967

கடைக்கழகக் காலத்திலேயே, மூவேந்தரும் வேள்வி மதத்தைத் தழுவி ஆரிய அடிமைகளாய்ப் போய்விட்டதனால், இந்தியா முழுவதையும் நிலையான ஆரிய அடிமைத்தனத்துள் அமிழ்த்துதற் பொருட்டு, நால்வரண வொழுக்கத்தை நிலைநிறுத்தும் மனுதரும சாத்திரம் என்னும் குலவொழுக்க நூல் கி.பி.2 ஆம் நூற்றாண்டிலும்; கோவிலமைப்பு,வழிபாட்டு முறை, போற்றியான் (அருச்சகன்) தகுதி, காண்முடிபு (சித்தாந்தம்), தெய்வச் சிறப்பு, வழிபாட்டின் பயன் முதலியவற்றை விளக்கிக் கூறும் ஆகமம் என்னும் வழிபாட்டு மறை கி.பி.6ஆம் நூற்றாண்டிலும் சமற்கிருதத்தில் இயற்றப்பட்டுவிட்டன. சிவனிய ஆகமங்கள் காமிகம்முதல் வாதுளம்வரை இருபத்தெட் டென்பர். காளி வழிபாட்டு மறையைத் தந்திரம் என்பர்.

66

“தந்த்ரங்கள் ஸம்ஹிதை, ஆகமம், தந்த்ரம் என மூவகைப்படும். அவற்றுள் ஸம்ஹிதைகள் வைஷ்ணவர்களாலும், ஆகமங்கள் சைவர் களாலும், தந்த்ரங்கள் சாக்தர்களாலும் போற்றப்படுகின்றன. அவை முற்றிலும் வைதிகக் கொள்கைகளைப் பின்பற்றியன எனக் கூறுதற்கு இடன் இல்லை. அவை தீக்ஷை கொண்டு ஆசிரியனிட மிருந்து கொள்ளத் தக்கன. தந்த்ரங்கள் கி.பி. 5ஆம் நூற்றாண்டின் பின்னரே உண்டாயின உண்டாயின என்பர்” என்று (P.S.) சுப்பிரமணிய சாத்திரியார் கூறுவர் (வடமொழி நூல் வரலாறு, ப.309).