பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91


சமற்கிருத மொழியும் பிராமணப் போற்றியானும் ஆரியத் தொல் கதைகளுந் தவிர, ஆகமப் பொருள் அனையவும் ஏற்கெனவே தமிழ் நாட்டிலும் தமிழிலும் உள்ளவையே என்றறிதல் வேண்டும். ஆகமம் என்னும் சொற்கே, புதிதாக வந்தது அல்லது தோன்றியது என்பதுதான் பொருள். எல்லா வகையிலும் ஆரியத்தை எதிர்க்கக் கூடிய தமிழ நாகரிகக் கோட்டையான தென்னாடு பிடிபட்டுப் போகவே, இந்தியா முழுதும் மதத்துறையிலுங் குலத்துறையிலும் ஆரிய வயப்பட்டுவிட்டது. பிராமணப் பூசகனே சமற்கிருதத்திற் போற்றி செய்வது, தமிழ்நாட்டுக் கோவில் மரபாயிற்று.

முதற் பராந்தகச் சோழன் (கி.பி.907-53), வேதம் வல்ல பிரா மணர்க்கு வீரநாராயணபுரம் முதலிய ஊர்களை முற்றூட்டாகக் கொடுத்து,பொற்கருப்பைத் தானமும் ஆள்நிறைப் பொன் தானமுஞ் செய்தான். ஆற்றூர் (ஆத்தூர்), திருத்தவத்துறைக் (லால்குடி) கோவில்களில், பூசைவேளையில் திருப்பதிகம் ஓதப் பிராமணரை அமர்த்தினான்.

முதலாம் இராசராசன் (கி.பி.958-1014) கட்டின தஞ்சைப் பெருவுடையார் கோவிற் கோபுரம், தாசுமகால் இந்தியாவிற்குத் தருவதினும் பதின்மடங்கு பெருமை தமிழகத்திற்குத் தருவதாகும். ஆயின் அவனும் அடிமையானதனால், சோழ மார்த்தாண்ட சதுர்வேதி மங்கலம் என்னும் திருவியலூரில், ஆள்நிறைப் பொன் தானஞ் செய்தான். அவன் தேவியும் பொற்கருப்பைத் தானஞ் செய்தாள். அவனுக்குக் குருக்களா யிருந்தவர்கள் இலாடம், காசி, காசுமீரம் முதலிய வடநாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட பிராமணர்கள். அவர்கள் பெருமடத் தலைவர்களாயிருந்து அரசியலில் மிகுந்த சொற்செல்வு பெற்று விளங்கினர். இலாடம் வங்கநாட்டின் ஒரு பகுதி.

அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய தேவாரப் பதிகங்கள் மொத்தம் 96,000 என்று சொல்லப்படுகின்றது. இன்று கிடைத்திருப்பவை எழுநூற்றுத் தொண்பத்தாறே(796). இவற்றுள் ஒருசிலவே இராசராசன் காலத்திற் கோவில்களிற் பாடப்படும் வழக்கிலிருந்தன. ஏனையவற்றின் ஏடுகளையெல்லாம் பிராமணர் தொகுத்து, தில்லையம்பலத்தில் ஓர் அறைக்குளிட்டுப் பூட்டி விட்டனர். இராசராசன் இம் மருமத்தை யறிந்து, அவ் வறையைத் திறக்கச் சொன்னான். கோவிற் சொத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்த தில்லைவாழந்தணர் என்னும் மூவாயிரம் பிராமணரும் மறுத்துத் தடுத்தனர். இராசராசன் ஒரு சூழ்ச்சி செய்து திறப்பித்தான். சிதல் அரித்த ஓர் ஏட்டுக் குவியல் காட்சியளித்தது. உடனே, “அரசே! கவலற்க. இக்காலத்திற்கு வேண்டியவற்றை மட்டும் வைத்துக்கொண்டு, வேண்டாதவற்றை யெல்லாம் யாமே சிதலரிக்க