பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100


யெல்லாம் விளைவிக்கவோ தேடவோ செய்யவோ பல்வேறு குலங்கள் ஏற்பட்டன.அப்பொருள்களுள், இன்றியமையாத வற்றிற்கு முன்னும், தேவையானவற்றிற்குப் பின்னும், இன்புறுத்து வனவற்றிற்கு அதன் பின்னும், நாகரிகச் சிறப்புப்பற்றியவற்றிற்கு இறுதியிலும் குலங்கள் எழுந்தன. பல்வேறு பொருள்களையும் ஒருவழித் தொகுத்தற்குப் பண்டமாற்றுத் தொழிலும், அவற்றைக் காத்தற்குக் காவல் தொழிலும், அவை தோன்றிய அன்றே அமைந்தன. தெய்வ வழிபாடும், நோயும் துன்பமும் இன்றிக் காக்கும் காவல்பற்றித் தோன்றியதே.

“மகனறிவு தந்தை யறிவு” என்ற முறைப்படி, தந்தையின் தொழில் திறமையும் மனப்பான்மையும் இயற்கையாகவே மகனுக்கமைவ தாலும், மக்கள்தொகை மிகாத தொடக்கக் காலத்தில் வேலை யில்லாத் திண்டாட்டம் சொல்லளவிலுந் தோன்றாமை யாலும், எல்லாத் தொழில்களும் தொல்வரவாகவே தொடர்ந்து செய்யப் பட்டு வந்தன. தலைமுறை மிகமிகத் தொல்வரவுத் தொழில் திறமை மிகுவதனாலும், அத் தொடர்ச்சி மேன்மேலும் போற்றப்பட்டு வந்தது. ஒருவன் தன் திறமைக்கும் விருப்பத்திற்கும் ஏற்றவாறு, எச் சமையத்திலும் தொழில் மாற முடியுமேனும், அதற்கேதுவான நிலைமை அக்காலத்தில் ஏற்படவில்லை.

துப்புரவு, ஒழுக்கம், கல்வி, செல்வம், அதிகாரம் முதலியன பற்றியன்றி, பிறப்பினால் ஏற்றத்தாழ்வு எவருக்கும் ஏற்றிக் கூறப் படவில்லை.

உணவை

எல்லா உயிர்வாழ்க்கைக்கும் இன்றியமையாத விளைப்பதனாலும், நிலையாகக் குடியிருந்து விளைவில் ஆறிலொரு பங்கைக் கடமையாக விறுத்து அரசை நிலைநிறுத்துவதனாலும், போர்க்காலத்திற் படைஞனாகிப் பொருது வெற்றியுண்டாக்கு வதனாலும், இரப்போர்க் கீந்து துறப்போர்க்குத் துணையா யிருப்பதனாலும், எல்லாத் தொழிலாளருள்ளும், உழவனே உயர்ந்த குடிவாணனாகவும் தலைசிறந்த இல்வாழ்வானாகவும் கொள்ளப் பட்டான். கைத்தொழிலாளரெல்லாம் உழவனுக்குப் பக்கத் துணை வராகவே கருதப்பட்டனர்.

66

66

உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா தெழுவாரை யெல்லாம் பொறுத்து.

99

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்.

99

(குறள்.1032)

(குறள்.1033)