பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103


வேளாளருள் ஒரு சாராரான வெள்ளாளர் சூத்திர வகுப்புள் அடக்கப்பட்டது, நாலாம் வகுப்பென்னும் வரிசை பற்றியே.

தொழில்பற்றிக் குலங்கள் ஏற்கெனவே ஏற்பட்டிருந்தனவேனும், அவற்றையெல்லாம் நால்வகைப் பிறவி வகுப்புகளாக வகுத்தவர் பிராமணர். அதனையே,

66

முற்படைப் பதனில்வே றாகிய முறைமைபோல் நால்வகைச் சாதியிந் நாட்டில்நீர் நாட்டினீர்

என்று, குலவிளக்க அகவல் பாடிய கபிலர் கூறினார்.

99

பிராமணர் கல்விக்களத்தைத் தமக்கேயுரியதாகக் கூறியதனால், கல்வித்துறையில் முன்பு தமிழர்க்கு வழங்கிய பார்ப்பார், அந்தணர், ஐயர் என்னும் பெயர்களுள் முன்னது முற்றும், பின்னவை ஓரளவும், பிராமணர்க்கு வரையறுக்கப்பட்டுவிட்டன. “அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்” என்று தொல்காப்பியரும், “பற்பலர் நாட்டிலும் பார்ப்பா ரிலையால்" என்று அகவற் கபிலரும், குறித்தது ஆரியப் பார்ப்பனரான பிராமணரையே.

ஐயன் என்னும் பெயர்

ஐ = 1. வியப்பு. "ஐவியப் பாகும்.

(தொல்.868)

2. வியக்கத்தக்க பெரியோன், அரசன், தலைவன். “என்னைமுன் நில்லன்மின்” (குறள்.771). 3. குடும்பத் தலைவனான தந்தை. “தன்னை சேவடித்தாமரை” (சீகாளத்.பு.நான்முக.124) 4.மணமான பெண்ணின் தலைவனான கணவன். “என்னைக்கு முதவாது.” (குறுந்.27)

ஐ - ஆய் = அன்னை.

ஐ-ஐது = வியப்பானது. “ஐதே யம்ம” (தொல். சொல்.358, உரை)

ஐ - ஐயன் = 1. பெரியோன் 2. ஐங்குரவர் என்னும் ஐந்து பெரி யோரின் பொதுப்பெயர்.தாய், தந்தை, அண்ணன், அரசன்,ஆசிரியன் என்னும் ஐவரும் ஐம்பெரியோர். தாயைக் குறிக்கும்போது ஐயை என்று ஈறு திரியும். தம் ஐயன் தமையன் (அண்ணன்). “தந்தைக்குப் பின் தமையன்.” 3.பெரியோனான முனிவன்.“ஐயர் யாத்தனர் கரணம் என்ப” (தொல்.1091). பிங்கல நிகண்டின் முனிவர் பகுதி “ஐயர் வகை என்று பெயர் பெற்றிருத்தல் காண்க. எல்லார்க்கும் எல்லாவற்றிற்கும் தலைவனான இறைவன். 5. சாத்தன் என்னும் தெய்வம். ஐயன் ஐயனார். 6. தலைவன்.

ஐயன் என்னும் சொல் பறையரும், ஐயா என்னும் விளிவடிவம் பாண்டிநாட்டு வெள்ளாளர் முதலியார் முதலிய பல குலத்தாரும், தந்தையைக் குறிக்க ஆளும் சொல்லாகும்.