பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 பிரிவு - சின்ன வூழியம் பெரிய வூழியம் என்னும் ஈரகமணப் பிரிவுகள். பட்டம் - மணியக்காரன், சேர்வைக்காரன், ஊழியக்காரன். பள்ளன் இடம் - சோழ பாண்டித் தமிழ்நாட்டின் தென்பாகம். தொழில் பயிர்த்தொழிலும் பண்ணை வேலையும். பிரிவு-அம்மாப்பள்ளன், அஞ்ஞாப் பள்ளன்,ஆத்தாப்பள்ளன், பணிக்கன், கடையன் முதலிய பல அகமணப் பிரிவுகள். "நெல்வகையை எண்ணினாலும் முடியாது (உயர்வு நவிற்சி)". பள்வகையை எண்ண தலைவன் பட்டம் - குடும்பன், நாட்டாண்மைக்காரன், பட்டக் காரன், நாட்டு மூப்பன். குலப்பட்டம் - குடும்பன், பண்ணாடி (பண்ணையாடி), மன்றாடி,மூப்பன். பள்ளி (வன்னியன்) இடம் - சோழ பாண்டித் தமிழ்நாட்டின் வடபாகம். பெயர் - பள்ளி, வன்னியன், செம்பியன். தொழில்-பயிர்த்தொழில், வாணிகம், கொல்லற்று (கொத்த) வேலை, பண்டை நாளிற் சிலர் படை மறவர். பிரிவு -அரசு,பந்தல்முட்டி, அஞ்சுநாள், கோவிலர், ஓலை முதலிய பல அகமணப் பிரிவுகள். தலைவன் பட்டம் - கவுண்டன், பட்டக்காரன், கண்டர், சம்புவராயன், நாயகர், நயினார் முதலியன. குலப் பட்டம் - கவுண்டன், படையாட்சி, நாய்க்கன், பிள்ளை, இராயன் முதலியன. வன்னி என்பது ஒரு மரவகையைக் குறிப்பின் தென்சொல்; நெருப்பைக் குறிப்பின் வஃனி (vahni) என்னும் வடசொல். கதிரவன் திங்கள் நெருப்பு என்னும் முச்சுடரும், முறையே, சோழன் பாண்டியன் சேரன் ஆகிய மூவேந்தர் குலத்திற்கும் முதலாகக் கொள்ளப்பட்டன.பண்டைத் தமிழகம் முழுதும் மூவேந்தர் ஆட்சிக் குட்பட்டே யிருந்தது. அவருக்கடங்கிய சிற்றரசர் பலர் ஆங்காங் கிருந்தாண்டனர். வன்னியைக் காவல் மரமாகக் கொண்ட குறுநிலமன்னர், உடையார்பாளையம் வேளைப்போற் சோழ