பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119

முதலியார்

குலங்கள்- (1) வேளாண் முதலியார் மூவேந்தர் காலத்திற் படை முதலியாராய் (படைத்தலைவராய்) இருந்தவரின் வழியினர்.

(2) செங்குந்த முதலியார் அல்லது கைக்கோள முதலியார் (சோழர் படைமறவராகவும் படைத் தலைவராகவும் இருந்தவரின் வழியினர்).

(3) அகம்படிய முதலியார் (கொத்தவேலை செய்பவர்). பட்டங்கள்-(1) இலங்கை யரசியலார் வழங்கும் சிறப்புப் பட்டம்.

(2) தஞ்சை மாவட்டச் சமணருள் ஒரு சாரார்க்கு வழங்கும் பட்டம்.

வண்ணான்

பெயர் விளக்கம் - ஆடைகளை வெளுத்து வண்ணமாக்குபவன். பெயர்கள் - வண்ணான், வண்ணத்தான், ஈரங்கொல்லி (ஏகாலி), காழியன்.

பிரிவு

-

இடம் பற்றியது. பாண்டிய வண்ணான், சோழிய வண்ணான், கொங்க வண்ணான்.

நிலைமை பற்றியது: தீண்டுவான் x தீண்டாதான்.

வல்லம்பன்

இடம் - தஞ்சை திருச்சிராப்பள்ளி மதுரை மாவட்டங்கள். தொழில் பயிர்த்தொழில்.

-

ம்

தலைவன் பட்டம் - சேர்வைகாரன்.

குலப் பட்டம் - ம் அம்பலகாரன்.

வலையன்

பெயர் வலையன், வலைகாரன், வேடன், சிவியான், குருவிக்காரன்

தொழில் - வலை வைத்துப் பறவை விலங்கு பிடித்தல், ஆறு குளங் களில் மீன் பிடித்தல்.

பிரிவு - பல அகமணப் பிரிவுகள்.

தலைவன் பட்டம் - அம்பலகாரன், கம்பளியன்.

குலப்பட்டம்-மூப்பன்,சேர்வை, அம்பலகாரன்,வன்னியன்.