பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

ஏட்டுச்சுவடிகளும், மதுரைத் தமிழ்ச் சங்கக் கட்டடத்தில் ஐந்திலே

ஒன்று வைக்கப்பட்டன.

திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கும் மூலமுமான உலக முதற்றாய் உயர்தனிச் செம்மொழியாம் தமிழ், சமற்கிருதக் கிளையும் பன்மொழிக் கலவையுமான புன்மொழியென்று, நாலரை யிலக்கம் உருபாச் செலவிட்டுத் தொகுக்கப்பட்ட, சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகரமுதலியிற் காட்டப்பட்டுள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலித் திட்டம் ஏற்படுமுன், ஒரு தமிழ்ப் பேரகர முதலி தொகுக்கவேண்டு மென்றும், அதற்கு நேருஞ் செலவனைத்தும் புதுக்கோட்டையரசு ஏற்றுக்கொள்ளு மென்றும், பாண்டித்துரைத் தேவர் தம்மிடமுள்ள புலவரைக் கொண்டு அப்பணியில் ஈடுபடவேண்டுமென்றும், அவருக்குப் புதுக்கோட்டை யரசர் எழுதிவந்த நெடுநாள் எழுத்துப் போக்குவர வடுக்கு, தமக்குப் பின் வந்த பிராமணரால் அகற்றப்பட்டு விட்டதென்று, ஓய்வுபெற்ற புதுக்கோட்டைத் தலைமை நடுத்தீர்ப் பாளர் சிவஞான முதலியார் என்னிடம் சொன்னார்.

ஆரியக் கருத்துகளைப் புகுத்தித் தமிழிலக்கியத்தை ஆரிய வண்ண மாக்குதற் பொருட்டே, தொல்காப்பியர் காலம் முதல், நூல் களும் நூலுரைகளும் பிராமணத் தமிழ்ப் புலவரால் இயற்றப்பட்டும் எழுதப்பட்டும் வந்திருக்கின்றன.

பிராமணர் அண்டிப் பிழைக்க வந்த அயலினச் சிறுகுழுவாரா யிருந்தும், தமிழ்நாட்டுக் கோவில்களில், தமிழர்க்குப் பயன்படா வாறும், தமிழ்கெடுமாறும், பல கல்வெட்டுகள் வடமொழியிற்

பொறிக்கப்பட்டுள்ளன.

(5) மதத் துறை

கடவுள் மத மறைப்பு: ஊர் பேர் குணங்குறி யின்றி எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளை, உருவமின்றி உள்ளத்தில் கண்டு தொழும் கடவுள் நெறியை, உலகில் முதன்முதல் தெளிவாகக் கண்டவர் தமிழரேயாயினும், அதனாற் பிராமணர்க்குப் பிழைப் பில்லை யென்றும், தமிழர் அறிவொளி பெறக்கூடா தென்றும், அந் நெறி அடியோடு மறைக்கப்பட்டுள்ளது.

றைவனொடு தொடர்பின்மை: சிவனியமும் மாயோனி யமும் தூய தமிழ் மதங்களா யிருந்தும், அன்பான தந்தையுடன் அவனுடைய அருமை மக்கள் நேரடியாய்ப் பேச முடியாவாறு, இடையில் ஓர் அயலான் நின்று தடுத்து, மக்கள் கருத்தை அல்லது விருப்பத்தைத் தானே அவர் கட்குத் தெரியாத அயன்மொழியில் தந்தைக்குத் தெரிவித்தல் போல், கோவிலிலுள்ள பரம