பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147


இரு தமிழ்ப் போராடியர்

உலக மொழிகளுள் ஒலிப்பு முயற்சி குன்றியது தமிழே யென்றும், அதன் நெடுங்கணக்கு முழு நிறைவானதென்றும், மேலை யாரிய மொழிகளும் தமிழினின்று கடன் கொண்டுள்ளன வென்றும், நாடு முழுதும் மேடையேறிப் பறைசாற்றிய பா.வே.மாணிக்க நாயகரும்; தமிழ்ப் பற்று, ஆரியத்தினின்று விடுதலை, தமிழ் வாழ்வு, குடும்ப நலம், கண்மூடிச் சடங்கொழிப்பு முதலியன பற்றி, எளிய இனிய மறப்பாடல்கள் ஏராளமாகப் பாடி நாட்டைத் திருத்திய புரட்சிப் பாவலர் பாரதிதாசனும் இரு தமிழ்ப் போராடிய ராவர். இந்தி யெதிர்ப்புத் தலைவர் இருவர்

மறைமலையடிகளும் பெரியாரும் தத்தம் நிலையில் நின்று இந்திக் கட்டாயத்தை எதிர்த்து நிற்க, இயன்றபோதெல்லாம் நாடு முழுதும் பொதுக் கூட்டங்களும் மாநாடுகளும் கூட்டி, இடை விடாது இந்தியை வன்மையா யெதிர்த்த தறுகட்படைத் தலைவர் இருவர், பேரா. சோமசுந்தர பாரதியாரும் தமிழகப் புலவர் குழு அமைப்பாளர் கி.ஆ.பெ. விசுவநாதமும் ஆவர். புலவர் பொறை குறைத்த பேராசிரியர்

மாக

ஆரியச் சூழ்ச்சியால், தமிழ்ப் புலவர் தேர்விற்குப் பாட வைக்கப்பட்டிருந்த சமற்கிருதப் பகுதியைப் பெருமுயற்சி செய்து நீக்கியவர் பேரா. கா. நமச்சிவாய முதலியார்.

பல்துறைத் தமிழ்த் தொண்டர்

தாமோதரம் பிள்ளை, பர்.உ.வே. சாமிநாதையர், பாலவநத்தம் வேள் பாண்டித்துரைத் தேவர், மு.சி. பூரணலிங்கம் பிள்ளை, ச. பவா னந்தம் பிள்ளை, த.வே.உமாமகேசுவரம் பிள்ளை, பன்னீர்ச்செல்வம், கா. சுப்பிரமணியப் பிள்ளை, மன்னார்குடிச் சோமசுந்தரம் பிள்ளை, நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், வ.திருவரங்கம் பிள்ளை, அண்ணாமலை ல யரசர், பண்டிதமணி கதிரேசச்செட்டியார், க.ப.மகிழ்நன் (சந்தோஷம்), துடிசைகிழார் அ.சிதம்பரனார், அம்பத்தூர்த் தலைமையாசிரியர் (M.) சோமசுந்தரம் பிள்ளை முதலிய பல்பேரறிஞர், தத்தம் துறையில் தத்தமக் கியன்றவாறு தமிழ்த் தொண்டு செய்தவராவர்.

வரலாற்று நூல் தொண்டர் மூவர்

சேசையங்கார், (P.T.) சீநிவாச ஐயங்கார், (V.R.) இராமச்சந்திர தீட்சிதர் ஆகிய மூவரும், தம் வரலாற்று நூலால் தமிழின் பெருமையைக் காத்தவராவர்.