பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152


தமிழ்த் துறையில், கடந்த அரை நூற்றாண்டாக நான் செய்து வரும் சொல்லாராய்ச்சியும் மொழியாராய்ச்சியும் அகரமுதலித் தொகுப்பும், தமிழ்ப் புலவர் அனைவரும் அறிவர். தனித்தமிழ் வாரி யாம் மறைமலையடிகள் எனக்குத் தந்த நற்சான்றும், 'செந்தமிழ்ச் செல்வி'யில் வெளியிடப் பெற்றுள்ளது. ஆயினும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலியைத் திருத்தவும் மறுபதிப்பு வெளியிடவும், தகுதியில்லாத ஐந்தமிழ்ப் புலவர் அமர்த்தப் பட்டுள்ளனர்.ஒவ்வொருதமிழ்ப்புலவரும் அகரமுதலித்தொகுப்பாளரா (lexicographer) யிருக்க முடியும் என்று, கல்வியமைச்சர் கருதுவதாகத் தெரிகின்றது. அது சரியான கருத்தாயின், ஏனை மொழிகளிலும் ன எல்லாப் புலவரும் அகரமுதலித் தொகுப்பாளரா யிருத்தல் வேண்டும். அஃதில்லை. அகரமுதலித் தொகுப்பிற்குத் தேர்வுப்பட்டம் பெற்றிருத்தல் மட்டும் போதாது; பன்மொழிப் பயிற்சியும், இருவகை வழக்கறிவும், சொல்லாராய்ச்சியும் மொழி யாராய்ச்சியும், சொல்லாக்க நெறிமுறையறிவும், ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகரமுதலிகளைத் துருவிப் பார்த்தலும் வேண்டும். சாமுவேல் சான்சன், நோவா வெபுசித்தர் (Noah Webster) முதலிய அகர முதலித் தொகுப்பாளர் வரலாற்றைப் பார்த்தால்தான், அகரமுதலித் தொகுப்பிற்குரிய தகுதிகள் எவையென்று தெரிய வரும்.

கங்கள்

எழுத

ஓய்வு பெற்ற சேலங் கல்லூரி வரலாற்றுப் பேராசிரியரும், திரு. பத்தவற்சலனார் முதலமைச்சுக் காலத்திற் கல்லூரிப் பாடப் பொத்த அமர்த்தப்பட்டவரும், முதன்மொழி' ஆசிரியருமாகிய சொக்கப்பனாரின் (எம்.ஏ.,எல்.தி.) தலைமையிற் சென்ற குழு வகுத்துக் கொடுத்த, என் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் தொகுப்புத் திட்டம் தள்ளப்பட்டு, அதற்கு ஒரு குழு அமர்த்தப் படவேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டுவிட்டது. இது ஒரு புகைவண்டியை ஓட்டுநர் ஒருவர்க்குத் தலைமாறாக (பதிலாக), அதை இழுத்துச் செல்ல ஒரு குழு அமர்த்த வேண்டுமென்று சொல்வது போன்றதே. கல்வித் துறை உயர்திரு. மாதவனார் கையில் இருந்திருப்பின் நன்றா யிருந்திருக்கும். அகரமுதலித் திட்டத்தை அவர் ஒருதலையாய் ஒப்புக்கொண்டிருப்பார்.

குமரன், குமரி என்னும் தூய தென்சொற்களை வடசொல் லென்று தள்ளிவிட்டது மன்றி, திருவாட்டி என்ற முழுத் தமிழ்ச் சொல்லை நீக்கி விட்டுத் திருமதி என்ற அரைத் தமிழ்ச்சொல்லைப் புகுத்தியதே, இற்றைக் கல்வித் திணைக்களத்தின் நிலைமையை விளக்கப் போதிய சான்றாம்.

66

குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்ட அறிவிப்புத் தொடர்களுள், 'அளவோடு பெற்று வளமோடு வாழ்க” என்பது, “அளவாகப் பெற்று வளமாக வாழ்க” என்றிருப்பின், சாரியை யின்மைக் குற்றம் நீங்கும்.