பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160


கல்வியறிவும் துப்புரவும் ஒழுக்கமும் இன்றியமையாதன. இவ்வகை முயற்சியில் நாடார் குலத்தினரைப் பின்பற்றல் வேண்டும்.

பொதுத் தேர்தலில் தகுந்த தலைவரைத் தேர்ந்தெடுக்கவும், தமிழ்ப் பொத்தக வெளியீடுகள் பல்கவும், சிறந்த அறிஞரும் புதுப் புனைவாளரும் தோன்றவும், புலவர் போற்றப்படவும், கட்டாயத் துவக்கக் கல்வி பெரிதுந் துணை செய்யும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்க்கு வேலையுங் கிடைக்கும்.

(6) பிறப்புப் பற்றாது தொழில்பற்றிய குடிமதிப்பு(census) (7) கல்வித்துறையிற் குலப்பட்டத்தை நீக்கல்

(8) மக்கள்தொகைக் குறைப்பு

இந்தியா 30 கோடி மக்களைத்தான் தாங்கமுடியும். இன்று 56 கோடியாக மக்கள்தொகை பெருகியுள்ளது. இங்ஙனமே தமிழ் நாடும் இருமடங்கு பெருகியுள்ளது. இதனால், காடழிவும் மழையின்மையும் உணவுத் தட்டும் விறகு தட்டும், வேட்டை விலங்கு பறவையின மறைவும், கால்நடை மேய்ச்சல்நில மின்மையும்,புன்செய் நிலக் குறைவும், குடியிருப்பு நில வீடின்மையும் ஏற்பட்டுள்ளன. இக் குறைகள் மேன்மேலும் வளரத்தான் செய்யும். மக்கள் பெருக்கத் தடுப்பைவிட (ஏற்கெனவேயுள்ள) தொகைக் குறைப்பே நன்று. இதற்கென்று தனித் திணைக்களம் ஏற்படுத்தி, உள்ள தொகையிற் பாதி குறையும்வரை, ஐந்தாண்டிற் கொருமுறையே திருமணங்கள் நடைபெறுமாறு சட்டம் பிறப்பித்தல் வேண்டும். இன்றேல், அடுத்த நூற்றாண்டு பஞ்சநிலை ஏற்பட்டு, அரசினர் அடக்க முடியாவாறு களவுங் கொள்ளையுங் கொலையும் மிகும்.

(9) முன்னோக்கும் சேணோக்கும்

நாடாளும் அரசன், தன் காலத்திற்குப் பின்பும் நாட்டிற்கு நன்மை பயக்குந் திட்டங்களைக் கையாள வேண்டும்.

கடைக்கழகப் பாண்டியரும், கரிகால் வளவன், இராசராசன், இராசேந்திரன் முதலிய சோழரும், இலங்கையில் தமிழரைக் குடியேற்றி எளிதாக அதைத் தமிழ்நிலமாக்கி யிருக்கலாம். அதை அவர் செய்திலர்; தம்கால உயர்வை மட்டும் கருதினர்.

6

கி.பி.15ஆம் நூற்றாண்டிற்குப் பின் கடலாட்சி பெற்ற ஆங்கிலர், ஆறாயிரங்கல் தொலைவில் இருந்து வந்து, அதன் மேலும் தமிழகத் திற்குத் தென்கிழக்கில் நாலாயிரம் கல் தொலைவிலுள்ள தென் கண்டம் (ஆத்திரேலியா) முழுவதையும் கைப்பற்றிவிட்டனர். தமிழரோ,கி.மு 50ஆம் நூற்றாண்டிலேயே கடலாட்சி பெற்றுச் சாலித் தீவைக் (Java) கைப்பற்றி இருந்தும், கி.பி.10ஆம் நூற்றாண்டிலும்