பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161


கடாரத்தை (பர்மாவை) வென்றிருந்தும், ஐம்பது கல் தொலை விலேயே அணித்தாகவுள்ள இலங்கையு மிழந்து, ஒண்டியிருக்கவும் அங்கு இடமின்றித் திண்டாடுகின்றனர்.

(10) தமிழனை முன்வைத்த இரட்டைப் பகுப்பு

நயன்மைக் கட்சியார், தமிழ்நாட்டு மக்களைத் தவறாகப் பிராமணர் பிராமணரல்லார் என்று பிரித்தனர். அது வந்தேறிகட்குச் சிறப்புக் கொடுத்து நாட்டு மக்களைக் குறைவுபடுத்துவதாகும். தமிழர் தமிழரல்லார் என்றே பிரித்தல் வேண்டும்.

தமிழர் யார்?

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதே தமிழர் கொள்கை. தமிழைப்போற்றுவாராயின், தமிழருக்கு மிக நெருக்கமான திரவிடர் மட்டுமன்றி, மராட்டியர் மார்வாடியர் முதலிய வடநாட்டாரும், ஆப்பிரிக்கர் ஐரோப்பியர் முதலிய அயல்நாட்டாரும் தமிழரே. பெருமையெனப் புன்செருக்கிற் பிரிந்து வாழ்ந்து பிறருக்கொன் றீயாத புல்ல ரேனும் எருமையொடு குரங்கரவம் தவளை தின்பார் இரப்பெடுப்பார் தீயதொழு நோய ரேனும்

கருமைமிகும் ஆப்பிரிக்கர் முண்ட மெய்யர்

காடுறையும் விலங்காண்டி மாந்த ரேனும்

அருமையுறுந் தனித்தமிழை விரும்பு வாரேல் அவரன்றோ தலையாய தமிழர் கண்டீர்.

தமிழைப் போற்றுதலாவது, தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமாகும் என்னும் உண்மையை ஒப்புக் கொள்வதே.

(11) பரிசுச் சீட்டு நிறுத்தம்

ஆசை காட்டல், போட்ட பணம் மீளாமை, உழைப்பின்றிப் ஆ பிறர் பணத்தால் விரைந்து செல்வராதல், இழப்பால் வருத்தமும் வென்றவன்பாற் பொறாமையும் உண்டுபண்ணல், எத்தனை முறை யாடினும் எல்லாரும் வெல்ல முடியாமை ஆகிய சூதாட்டியல்பு களுடன், அயல் மாநிலத்திற்குப் பணம் போதலாகிய தீதும் கூடிய பரிசுச் சீட்டுத் திட்டம், தமிழ்நாட்டில் தோன்றிய திருவள்ளுவர் பெயருக்கு இழுக்கு நேராவண்ணம், உடனே நிறுத்தப் பெறுவதே நன்றாம்.

பொதுநலத் திட்டங்கட்கு வேண்டும் பணத்தைச் செல்வரிடத் தன்றி ஏழை மக்களிடமிருந்து பெறுவது எவ்வகையிலும் பொருத்த மின்றாம்.