பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162


(12) பொறுப்பாட்சி (Responsible Government)

மக்கள்தொகை மிகாத இடைக்காலத்தில், அரசன் அல்லது முதலமைச்சன் நாடாளு மன்றத்திற்கே (Legislature) கணக்கொப்பு விப்பவனாயிருந்தான். இன்றோ முன்போல் எல்லார்க்கும் பிழைப் பின்மையால், ஆட்சித்தலைவன் குடிகள் என்னும் பொதுமக்கட்கே நேரடிப் பொறுப்பாளன் ஆகின்றான். ஆதலால், நாட்டிற் பிறந்த அனைவர்க்கும் பிழைப்பு வழி வகுத்தல் வேண்டும். அஃதியலாக்கால், நேர்மையான முறையில் மக்கள்தொகையைக் குறைத்தல் வேண்டும்.

வீடு கட்ட நிலப்பரப்பைப் பயன்படுத்தாது வான்வெளியையே பயன்படுத்தி, வானளாவிகள் (skycrapers) எழுப்ப வேண்டும். நிலப் பரப்பைப் பயன்படுத்தின், பழனங்களையும் ஏரிகளையும் விட்டுவிட்டுப் பாறைநிலத்திலும் கல்லாங்குத்திலும் முரம்பு மேட்டிலுமே கட்ட வேண்டும். விளைநிலங்கள் என்றும் விளை நிலங்களாகவே யிருத்தல் வேண்டும்.

(13) மாணவர் அரசியற் கட்சியிற் சேராமை

மாணவர், கல்வியிலேயே முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டிய பயிற்சியாளராயும், தத்தம் திறமைக்கும் மனப்பான்மைக் கும் ஏற்பப் பிழைப்புவழி தேடும் முயற்சியாளராயும், பட்டறிவும் அகக்கரண வளர்ச்சி நிறைவும் பெறாத இளம்பருவத்தாராயும் ருப்பதால், அவர் அரசியற் கட்சிகளிற் சேர்தலோ சேர்க்கப் படுதலோ, கல்விநெறிக்கு மாறும் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை யும் ஆன கேடாகும். இதைக் கல்வியமைச்சன்மார் கண்டித்துத் தடுக்க வேண்டியிருக்க, அதற்கு மாறாக அதை ஊக்குவது, வேலியே பயிரை மேய்தல் போன்றாம். அரசியற் கட்சியைச் சார்ந்த மாணவரின் அகக்கரண வியல்பு, பெரும்பாலும் இயற்கை வளர்ச்சியடையாது கட்சியச்சில் வார்க்கப்பட்டுவிடுகின்றது. அதனால், அவர் தனிப் பட்ட தன்மையும் திறமும் அவர்க்கும் நாட்டிற்கும் பயன்படாது போகின்றன.

மாணவரைக் கல்லூரிகளில், சிறப்பாக மருத்துவக் கல்லூரி களில் சேர்ப்பதற்கும்; வேலை வேண்டுவோரை வேலையில் அமர்த்தற்கும் கையூட்டு வாங்காமை.

தமிழின ஒற்றுமை

இங்கிலாந்தில் ஐபீரியர், கெலத்தியர் (Celts), பித்தியர்(Picts), காட்டியர் (Scots), ஆங்கிலர், சாகசனியர் (Saxons), சூதியர் (Jutes), தேனியர் (Danes), நார்மணியர் (Normans) முதலிய ஒன்பான் அல்லது பன்னிரு சிற்றினங்கள் கலந்த கலவைப் பேரினமாயிருப்பவர் இற்றை ஆங்கிலேயர். அதனால், மதிநுட்பமுள்ள மக்கள் பிறந்து, நீராவியும்