பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168


பின்னிணைப்பு

1. உலகத் தமிழ்க் கருத்தரங்கு மாநாடுகள்

திருத் தனிநாயகம் தோற்றுவித்த உலகத் தமிழ்ப் பேரவைச் சார்பாக, இதுவரை நடைபெற்ற உலகத் தமிழ்க் கருத்தரங்கு மாநாடுகள் மூன்றாலும், தேமதுரத் தமிழோசை உலகெல்லாம் பரவிவிட்டதாகப் பல பேராசிரியரும் கருதிக்கொண்டிருக்கின்றனர். ஆரியத்தால் அடைந்த பேதைமை இன்னுந் தமிழருள்ளத்தினின்று நீங்கவில்லை என்பதற்கு, இது ஒரு சான்றாம். தமிழனை ஆரியனும் ஏமாற்றுகின்றான், ஏமாற்றுகின்றான்.

திரவிடனும் ஏமாற்றுகின்றான், தமிழனும்

பர்.தெ.பொ.மீ.யின் மாணவரென்று தம்மைச் சொல்லிக் கொள்ளும் திருத் தனிநாயகம், தமிழ் வளர்ச்சிக்கென்று உலகத் தமிழ்ப் பேரவையைத் யைத் தோற்றுவித்ததாகத் தெரியவில்லை. அண்ணாமலை நகரில் அவர் என்னைப் பார்க்க வந்திருந்தபோது, சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகர முதலியிலுள்ள குற்றங் குறைகளை யெல்லாம் எடுத்துக் காட்டினேன். அதற்கு அவர் ஒரு விடையுஞ் சொல்லாது சென்றுவிட்டார். அதனால், அவருக்குத் தமிழ்ப்பற் றில்லையென்றும், என் தமிழ்த் தொண்டிற்குப் பயன்பட மாட்டாரென்றும் கண்டுகொண்டேன். அவரும், தாம் அமைக்கும் குழுக்களில் என்னைச் சேர்க்கக்கூடா தென்றும், சேர்ப்பின் அவர் வேணவா நிறைவேறாதென்றும் துணிந்துவிட்டார்.

மறைமலையடிகளும் நானும், வயிறு வளர்க்கவோ பொருளீட் வோ தமிழும் பிறவும் கற்காது, தமிழை வடமொழிப் பிணிப் பினின்று மீட்கவே பலவும் கற்றாய்ந்தேம். ஆயினும், திருத் தனிநாயகம் நடத்திய உலகத் தமிழ்க் கருத்தரங்குகள் மூன்றிற்கும் எனக்கு வெற்றழைப்பும் இல்லை. அவ் வரங்குகளிற் கலந்துகொண்ட தமிழ்ப் பேராசிரியருள் ஒருவரும் இதுபற்றி வினவவுமில்லை.

முதற் கருத்தரங்கு, முறைப்படி தமிழ்நாட்டில் நடைபெறாது, அயல்நாடான மலையாவில் நடைபெற்றது. கட்சித் தலைவர் பலர் சுற்றுலாச் செல்வதுபோற் குடும்பத்துடனும் அங்குச் சென்றனர்.

இரண்டாம் கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது. தமிழன்பர் பலர் என்னைப்பற்றித் திரு. அண்ணாதுரையார்க்கு எழுதினதனால், அவர் தம் ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழ்த் தாள்கள்' (Tamil Papers) என்னும் கடைப்பட்ட 8ஆம்