பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

மாவலி என்னும் சேரவேந்தன் மகனான வாணன், வேம்பாய்க்கு (Bombay) வடக்கே மேல்கரையடுத்த சோணிதபுரம் என்னும் நகரிலிருந் தாண்டு வந்தான். அவன் மகள் உழை கண்ணன் பேரனான அநிருத்த னொடு களவொழுக்கம் பூண்டு வந்தாள். அதுகண்ட வாணன் அநிருத்தனைச் சிறையிட்டான். அதனால் கண்ணன் படையொடு வந்து பொருது வாணனைத் தோற்கடித்தான். உடனே வாணன் அநிருத்தனையும் தன் மகளையும் கண்ணனிடம் ஒப்புவித்து மன்னிப்புப் பெற்றான். அன்று அநிருத்தன் தந்தையான காமன் (பிரத்தியும்நன்) ஆடிய வாகைக் கூத்து, பேடி என்னும் புறநட வகையாகும். அதையே,

சுரியற் றாடி மருள்படு பூங்குழற்

பவளச் செவ்வாய்த் தவள வாணகை

யொள்ளரி நெடுங்கண் வெள்ளிவெண் டோட்டுக் கருங்கொடிப் புருவத்து மருங்குவளை பிறைநுதற் காந்தளஞ் செங்கை யேந்திள வனமுலை யகன்ற வல்கு லந்நுண் மருங்கு

லிகந்த வட்டுடை யெழுதுவரிக் கோலத்து வாணன் பேரூர் மறுகிடைத் தோன்றி நீணில மளந்தோன் மகன்முன் னாடிய

பேடிக் கோலத்துப் பேடுகாண் குநரும்

99

(L0600CLD. 3:116–125)

என்று பாடினார் சீத்தலைச்சாத்தனார். பேடிக் கூத்து முன்னரே தமிழகத்தில் ஆடப்பட்டு வந்தது. முதற் கடல்கோட்குப்பின் குமரி நாட்டினின்று வடக்கிற்சென்ற ஆயர்வழியினனே கண்ணனாதலால், அவன் மகன் அந் நடத்தை முன்னோர் வாயிலாக அறிந்திருந்து ஆடினான்.

வாணன் நகர் குசராத்து என்னும் குச்சரநாட்டி லிருந்ததனால், அற்றைச் சேரநாடு அதுவரை பரவி யிருந்தமை அறியப்படும். தனால், முழுகிப்போன குமரிநாடு முழுதும் பாண்டிநாடா யிருந்த காலத்து, இந்திய நிலமுழுதும் குமரியாற்றிலிருந்து பனிமலைவரை, கிழக்கிற் சோழநாடும் மேற்கிற் சேரநாடுமாக இருந்ததென்னும் உண்மையும் புலனாகும். குமரிநாடு முழுகிய பின்பும், இந்தியா முழுதும் மூவேந்த ராட்சிக் குட்பட்டு முந்நாடாயிருந்த நிலை மையையே, நாரதன் மூவுல குலாவி (திரிலோக சஞ்சாரி) என்னும் வழக்குணர்த்தும். மூவுலகென்றது மூவேந்தர் நாடுகளையே 'திரிபுவன தேவன்', 'திரிபுவனச் சக்கரவர்த்தி’, ‘மூவுலகாளி' என்று சோழர் விருதுப் பெயர்கள் கொண்டிருந்தமை காண்க.

அகத்தியர் இராமன் காலத்திலேயே தமிழகம் வந்து பொதிய மலையில் தங்கிவிட்டதனால், அவர் 'துவராபதிப் போந்து

66