பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண் மரையும் பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும் அருவாளரையும் கொண்டுபோந்து, காடு கெடுத்து நாடாக்கிப் பொதியின்கணிருந்து, இராவணனைக் கந்தருவத்தாற் பிணித்து, இராக்கதரை ஆண்டு இயங்காமை” விலக்கினார் என்று, நச்சினார்க்கினியர் தம் தொல் காப்பிய எழுத்ததிகார உரைமுகத்திற் கூறியிருப்பது பொருந்தாது. இதிலிருந்து அறியக் கூடியதெல்லாம், கண்ணன் காலத்தில் மராட குச்சர நாடுகளில் தமிழ வேளிர் குடியிருந்தனர் என்பதே. இனி, அகத்தியர் இராவணனைத் தம் இசைவலிமையால் அடக்கித் தமிழகம் புகாமற் செய்தனர் என்பதும், இராமாயணக் கதையொடு முரண்படுவதாகும்.

அருச்சுனன் (மருதன்) தென்னாட்டுத் திருநீராட்டு வருகை

அருச்சுனன் குமரிநீராடத் தென்னாடு வந்தபோது பாண்டியன் (சித்திராங்கதன்) மணவூர் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண் டிருந்தான். அங்குப் பாண்டியனின் விருந்தினனா யிருந்த அருச்சுன னுக்கும் பாண்டியன் மகள் சித்திராங்கதைக்கும் இடையே காதல் நேர்ந்ததனால், இருவருக்கும் திருமணம் நிகழ்ந்தது.

சித்திராங்கதன், சித்திராங்கதை யென்பன, பாரத ஆசிரியர் வேண்டுமென்றே இட்ட வடசொற் கட்டுப்பெயர்கள்.

மணவூர் நிலையான தலைநக ரன்மையின், அங்குத் தமிழ்க் கழகம் ஏற்படவில்லை.

வடமொழியாளர் மணவூரை மணலூர் என்று திரித்து, சிக்காதாபுரி என்று மொழிபெயர்த் திருப்பதாகத் தெரிகின்றது.

பாரதப்போரில் முத்தமிழ் வேந்தருங் கலந்துகொண்டனர். சோழபாண்டியர் பாண்டவர்க்குத் துணைநின்று பொருதனர்.சேரன் உதியஞ் சேரலாதன் நடுநிலையா யிருப்பதுபோல் ஒரு பக்கமும் சேராதிருந்து, இருபக்கப் படைகட்கும் போர் நிகழ்ந்த பதினெண் நாளும் சோறு வழங்கி, பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன் என்னும் பெறற்கரும் பெரும்பெயர் பெற்றான்.

66

யாணர் வைப்பி னன்னாட்டுப் பொருந

வான வரம்பனை நீயோ பெரும

அலங்குளைப் புரவி யைவரொடு சினைஇ நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை யீரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்

பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்" (புறம்.2)

என்று முரஞ்சியூர் முடிநாகராயர் பாடியிருத்தல் காண்க.