பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 அத்தகைய சிறப்பு வாய்ந்ததேனும், முகமண்டபமும் கூட கோபுரமுங் கொண்ட மணிமாட மாளிகைகள் நிறைந்த ஒரு மாநகரம், ஆழ்கடலில் மூழ்கிப்போனபின், அதன் கற்கள் சிலவற்றை யெடுத்துக் கட்டிய ஒரு சிற்றில் போன்றதே தொல்காப்பியம். இலக்கணத்திற்கு முந்தியது இலக்கியம்; இலக்கியத்திற்கு முந்தியது மொழி. தொல்காப்பியத்திற்கு முந்தின இலக்கணங்களே நூற்றுக்கணக்கின; இலக்கிய நூல்கள் ஆயிரக்கணக்கின; ஏனைப் பனுவல்கள் எண்ணிறந்தன. தொல்காப்பியச் சிறப்புப்பாயிரம் பாடிய பனம்பாரனார் என்னும் உடன் மாணவர், 66 செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல் என்று கூறியிருப்பது, 2ஆம் கடல்கோட்குப்பின், நீண்ட காலமாகக் கழகந் தோன்றாமையால் பண்டை நூல்களெல்லாம் ஆரியரால் அழியுண்டும் மறையுண்டும் போனநிலைமையில், உ.வே.சாமி நாதையர் திருவாவடுதுறை மடத்தில் அழிவிற்குத் தப்பிக் கிடந்த கடைக்கழகப் பனுவல்களையும் தொகைநூல்களையும் கண்டெ டுத்ததுபோல், தொல்காப்பியனாரும் பல தொன்னூல்களைக் கண்டெடுத்தாரோ எனக் கருத இடந்தருகின்றது. 66 ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்" என்று பனம்பாரனாரும், 66 இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென் றனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே." 66 நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய” (தொல்.880) (தொல்.1570) என்று தொல்காப்பியனாரும் கூறியிருப்பதால், தொல்காப்பியக் காலத்திலேயே ஆரியம் தமிழகத்தில் ஓரளவு வேரூன்றிவிட்டதை அறியலாம். ஆரியர் கூறும் படைப்புத் தெய்வமாகிய பிரமனைத் தமிழர் ஒத்துக்கொள்ளாமையால், முத்திருமேனியரும் சேர்ந்தவரே முதற் கடவுள் என்பதை யுணர்த்தற்கு, ஆரியப் போலித் துறவியர் சென்றவிடமெல்லாம் முக்கவர்க்கோலை ஏந்திச் சென்றனர். 66 எறித்தரு கதிர்தாங்கி யேந்திய குடைநீழல் உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்ற முக்கோலும்