பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

தொல்காப்பியத்திற் சொல்லப்பட்டுள்ள (அகமும் புறமும் பற்றிய) பாட்டு, உரை, நூல் (இலக்கணமும் பல்வேறு அறிவியலும்), வாய்மொழி (மந்திரம்), பிசி (விடுகதை), அங்கதம் (எதிர்நூல்), முதுசொல் (பழமொழி) என்னும் எழுநில யாப்பிற்கும்; வெள்ளை, ஆசிரியம், கலி, வஞ்சி, மருள், பரிபாடல் என்னும் அறுவகைப் பாவிற்கும்; புறநிலை வாழ்த்து, வாயுறை வாழ்த்து, அவையடக்கியல், செவியுறை என்னும் நால்வகை வாழ்த்திற்கும்; பாவண்ணம், தாவண்ணம் முதலிய இருபதுவகை வண்ணத்திற்கும்; அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்னும் எண்வகை வனப்பிற்கும் இலக்கியமா யிருந்தவற்றுள் ஒன்றுகூட இன்றில்லை.

இலக்கணத்திற்கு முந்தியது இலக்கியமும் இலக்கியத்திற்கு முந்தியது மொழியுமாதலாலும், சொல்லிலும் சொல்வடிவிலும் உலக வழக்கினின்று வேறுபட்ட செய்யுள் வழக்கே பண்டை யிலக்கண நூல்களிற் பெரும்பாலும் எடுத்து விளக்கப் பட்டமையாலும், உலக வழக்குப் பொதுமக்களுடைய தாதலாலும், பொதுமக்களொடு தொடர்புகொள்ளாத புலவர் சிலரும் இலக்கண நூல் இயற்றி யுள்ளமையாலும், எல்லாத் தமிழ்ச்சொற்களையும் எடுத்துக் கூறும் மேலைமுறைச் சொற்களஞ்சியம் இதுவரை தொகுக்கப் பெறாமை யாலும், தமிழின் சொல்வளத்தை மொழியாராய்ச்சி வாயிலாகவே அறிதல் கூடும்.

சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே

99

(எழுத்து.62)

அ ஐ ஔஎனும் மூன்றலங் கடையே என்னும் தொல்காப்பிய நூற்பா உண்மைக்கு மாறானது. இந் நூற் பாவின் 2ஆம் அடியின் “அவைஒள என்னும் ஒன்றலங் கடையே” என்னும் பாட வேறுபாடு மிகப் பொருத்தமாம். ஆயின், தொல் காப்பியரைப் பெருமைப்படுத்துவதாகக் கருதிக்கொண்டு இப்பாட வேறுபாட்டை ஏற்க மறுப்பவர், உண்மையில் தொல்காப்பி யரையும் தமிழையும் சிறுமைப்படுத்துபவரேயாவர். தொல்காப் பியத்திற் சகர முதற்சொல் ஆளப்பெறாமை, அச் சொல் தமிழில் இன்மைக்குச் சான்றாகாது.

..

சரிசமழ்ப்புச் சட்டி சருகு சவடி சளிசகடு சட்டை சவளி

-

சவிசரடு

சந்து சதங்கை சழக்காதி யீரிடத்து வந்தனவாற் சம்முதலும் வை

99

என்று, பண்டை நாளிலேயே ஓர் இலக்கண நூலாசிரியனால் சகர முதலின்மைக் கொள்கை மறுக்கப்பட்டுள்ளமை, நன்னூல் மயிலை நாதருரையால் (எழுத்து.51) அறியக்கிடக்கின்றது.