பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

என்று கபிலர் பாடியதை இருங்கோவேள் ஏற்றுக்கொண்டது போன்றே, இளந்திரையனும் உருத்திரங்கண்ணனார் பாடியதை ஏற்றுக் கொண்டான் என்று கூறி விடுக்க.

கொங்குநாடு

கொங்கு என்பது மணம், பூந்தாது, தேன், கள், கருஞ்சுரை, சொங்கு (உமி அல்லது புறத்தோல்), குவிவு என எண் பொருள்படும் பலபொருளொருசொல்.கொங்குநாட்டில் தேன் மிகுதியாக அல்லது சிறந்ததாகக் கிடைப்பதால், அந் நாடு கொங்குநாடெனப்பட்டது என்று பலர் கூறுவர். தேன் கொங்குநாட்டிற்கே சிறப்பாக வுரிய தன்று. சோலைகள், சிறப்பாக இயற்கைச் சோலைகள் உள்ள இடமெல்லாம் தேன்கூடு கட்டப்படும். அத்தகைய சோலைகளாற் போர்க்கப் பட்டிருப்பவை பெருமலைகள் அல்லது

உயர்மலைத்தொடர்கள். கொங்குநாட்டு மலைகளிற் போன்றே பிறநாட்டு மலைகளிலும் தேன் கூடு கட்டும்.

66

அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து திணிநெடுங் குன்றந் தேன்சொரியும்

99

(புறம்.109)

பறம்புமலை, முற்காலச் சோழநாட்டை அல்லது பிற்காலப் பாண்டி நாட்டைச் சேர்ந்ததாகும். பறம்புலைத் தேன் எவ்வகையிலும் திறக் கேடுள்ள தன்று. கொங்குநாட்டு ஆனைமலையை ஒரு கூறாகக் கொண்ட குடமலைத்தொடர், நெல்லை மாவட்டத் தென்கோடி வரை செல்கின்றது. அங்கும் தேன்கூடு கட்டத்தான் செய்கின்றது.

கொங்குநாட்டின் பண்டைக் காலப் பரப்பைப் பலர் சரியாக அறியவில்லை. குடகமும் எருமையூர் (மைசூர்) நாடும் சேலங் கோவை மாவட்டங்களும் சேர்ந்ததே முதற்காலக் கொங்குநாடாம். அதில் உடல்போல் மிகுந்திருந்தது எருமையூர் நாடே. மூவேந்தர் நாடு களுள்ளும் உயர்ந்து குவிந்திருக்கும் நிலப்பகுதி எருமையூர் நாடென்பதை, புறணிப் படத்தையும் (relief map) மட்டக்கோட்டுப் படத்தையும் (contour map) பார்த்துத் தெளிக. சேரநாட்டின் கீழைப் பகுதி, மலைகளாலும் உயர்நிலமட்டத்தாலும் குவிந்திருப்

பதனாலேயே கொங்குநாடெனப்பட்டது.

-

=

கும் - கும்மல் = குவியல். கும்மி = கை குவித்தடித்து விளையாடும் விளையாட்டு. கும்மி - கொம்மி.

கும் - கொம் - கொம்மை = 1. மேடு. 2.அடுப்புக் குமிழ். 3.கதவுக் குடுமி. 4.கொம்மட்டிக்காய் (கும்மட்டிக்காய்). 5.கை குவித்துக் கொட்டுகை. 6.இளமுலை. “வாரணி கொம்மை” (பரிபா.22:30)