பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

(Analysis) என்னும் பொருளது. நந்நான்கு இயல்கள் (பாதங்கள்) உள்ள எண்ணதிகாரங்கள் (அத்தியாயங்கள்) கொண்டது பாணினி வியாகரணம். அதனால் அது அட்டாத்தியாயீ (அஷ்டாத்யாயீ) எனப் பெயர் பெற்றது. அதன் நூற்பாக்கள் (சூத்திரங்கள்) ஏறத்தாழ 3980. அந் நூற்குமுன் எண்ணிலக்கண நூல்கள் இயற்றப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. அவற்றுள் முதலது வேதகாலத்த தெனப்படும்

ஐந்திரம்.

தொல்காப்பியம் பாணினீயத்திற்கு முந்நூற்றாண்டு முந்தியது. அதனாலேயே, “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்" என்று மட்டுங் கூறினார் தொல்காப்பியரின் உடன்மாணவரான பனம்பாரனார். சமற்கிருத இலக்கண நூல்களெல்லாம் பவணந்தி நன்னூல்போல் எழுத்துஞ் சொல்லுமே கூறுவன வென்றும், தமிழிற்போல் ஒரு வழங்கு மொழியை விளக்காது வேதமும் இதிகாச புராணங்களு மாகிய இலக்கியத்திலுள்ள அரைச் செயற்கையான நடை மொழியையே (Semi-artificial literary dialect) விளக்குவன வென்றும் அறிதல் வேண்டும்.

தொல்காப்பியம் எழுத்துஞ் சொல்லும் பொருளுமாகிய மூவதிகாரங்கொண்டது; பொருளதிகாரத்தில்,தமிழுக்கே சிறப்பான பொருளிலக்கணத்துடன் செய்யுளியலையும் அணியியலான உவமவியலையும் உட்கொண்டது. ஆதலால், பாணினீயத்தினின்று தொல்காப்பியம் தோன்றியதாகச் சிலர் கூறுவது, பேரன் பாட்டனைப் பெற்ற கதையும், களாச்செடியிற் பலாப்பழம் பறித்த கதையுமே யாகும்.

66

66

66

பாணினி, "அ இ உண்”, ருலுக்”, “ஏ ஓங்”, “ஐ ஔச்”, “ஹய வ ரட்”, “லண்”, ஞமஙண நம்" முதலிய 14 குறுங்கணக்கு நூற் பாக்களை, சிவபெருமானின் உடுக்கையினின்று தோன்றிய ஒலி களாகக் கூறி, அவற்றிற்கு ‘மகேசுவர சூத்திரங்கள்' எனப் பெயரிட்டது, இந்தியப் பழங்குடிவாணரை ஏமாற்றத் துணிச்சலுடன் செய்த படுமோசச் சூழ்ச்சியாகும்.

66

புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின் விண்ணவர் கோமான் விழுநூ லெய்துவிர்”

(சிலப்.11:98-9)

என்னும் சிலப்பதிகார அடிகளை நோக்கின், பாணினியின் ஏமாற்றை மக்கள் நம்பி அவரிலக்கணத்தையே போற்றிப் பயிலுமாறு, தமிழ்த் தொடர்பு காட்டும் ஐந்திர வியாகரணப் படிகளை யெல்லாம் தொகுத்து, அழகர்மலையடுத்ததும் மக்கள் வழங்காததும் ஆழம் மிக்கதுமான ஒரு பொய்கைக்குள் எறிந்துவிட்டதாகக் கருத இடமுண்டாகிறது. தமிழகத்துத் தோன்றிய ஐந்திரம் தமிழகத் திலேயே அழியுண்டது போலும்!