பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

குடவம் (பித்தளை-brass)

மூன்றில் இருபங்கு செம்பும் ஒருபங்கு துத்தநாகமுங் கலந்தது குடவமாகும். உரோம நகரில் கி.மு. 20-ல் குடவக் காசு வழங்கிற்று. தமிழகத்தில் ஏனமும் எளியார் அணிகலமும் செய்யக் குடவம் கி.மு. 3ஆம் நூற்றாண்டிற் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

மோரியப் படையெடுப்பு

(கி. மு. 3ஆம் நூற்றாண்டு)

தமிழகத்தின்மேல் முதன்முதலாகப் படையெடுக்கத் துணிந்த வட இந்திய (மகதநாட்டு மோரிய) அரசன் பிந்துசாரன் (கி.மு.301- 273), ஒரு பெரும்படையைத் தென்னாட்டிற் கனுப்பினான். அப் படை கோசர் என்னும் ஒருவகைப் பொருநரைத் துணைக்கொண்டு, தென்கன்னடம் என்னும் கொண்கானத்தின் கடற்கரைப் பகுதியான துளுநாட்டிற் புகுந்து, அதை யாண்டுகொண்டிருந்த நன்னன் என்னும் தமிழ் மன்னனை நாட்டைவிட்டு ஓட்டிவிட்டது. து. இதனை, அழியல் வாழி தோழி நன்னன்

நறுமா கொன்று நாட்டிற் போக்கிய ஒன்று மொழிக் கோசர் போல

99

என்னும் குறுந்தொகைப் பாட்டால் அறியலாம்.

(குறுந்.73)

பின்னர், கோசர் தென்கிழக்காக வந்து கொங்குநாட்டுப் பழையன் மோகூரைத் தாக்கினர். அவன் அவரைப் புறங்கண்டு துரத்தினான். அதன்பின் கோசருக்குத் துணையாக மகதத்தினின்று ஒருபுதுப்படை வந்தது. அது வரும்போது, அதைச் சேர்ந்த தேர்களும் சரக்கு வண்டிகளும் வருவதற்குத் தடையாயிருந்த பாறைகளை யெல்லாந்தகர்த்து,பாதையைச் செவ்வைப்படுத்திக்கொண்டு வந்தது.

அது,

66

துனைகா லன்ன புனைதேர்க் கோசர் தொன்மூ தாலத் தரும்பணைப் பொதியில் இன்னிசை முரசங் கடிப்பிகுத் திரங்கத் தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர் பணியா மையிற் பகைதலை வந்த மாகெழு தானை வம்ப மோரியர் புனைதேர் நேமி யுருளிய குறைத்த இலங்குவெள் ளருவி யறைவாய்

99

என்னும் அகப்பாட்டுப் பகுதியால் அறியப்படும்.

(அகம்.251)