பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

அளவிற்கு மிஞ்சினதாம். அதற்கும் மேல், நெடுஞ்செழியன் வார்த்திகன் காலில் விழுந்து வணங்கியது தமிழினத்திற்கே அழியாப் பேரிழிவாம். இதனால் அற்றைப் பிராமணர் கொட்டமும் தமிழர் அடிமைத்தனமும் தெளிவாம்.

66

கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர் இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கி

99

(சிலப் 23:120-1) என்று இளங்கோவடிகள் படிமாற்றணியால் மறைத்துக் கூறியிருத் தல் காண்க.

கோப்பெருந்தேவியின் ஊடலால் ஏற்பட்ட மனக்கலக்க நிலை யில், நெடுஞ்செழியன் ஆய்ந்து பாராது கோவலனைக் கொன்றது கடுங் குற்றமாயினும்,

பொன்செய் கொல்லன் றன்சொற் கேட்ட யானோ வரசன் யானே கள்வன்

மன்பதை காக்குந் தென்புலங் காவல்

என்முதற் பிழைத்தது கெடுகவென் னாயுளென மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே தென்னவன் கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கிக் கணவனை யிழந்தோர்க்குக் காட்டுவ தில்லென் றிணையடி தொழுதுவீழ்ந் தனளே

99

(சிலப்.20:75-81)

என்னுஞ் செய்தி, வளைந்த கோலை உடனே நிமிர்த்திவிட்டது. இதனாற் பாண்டியன் செங்கோன்மையும் வெளியாயிற்று.

சேரன் செங்குட்டுவன், தமிழரசரை யிகழ்ந்த கனகவிசயர்மேல், பனிமலையி லெடுத்த பத்தினித் தெய்வப் படிமைக் கல்லை ஏற்றிக் கொணர்ந்தது, என்றும் தமிழர்க்குப் பெருமை தருவதே. ஆயினும், அக்கல்லைக் கங்கைக் கரையில் நீராட்டியபோது, மாடலன் என்னும் பிராமணனுக்குத் துலைநிறைத் தானமாக 50 துலாம் பொன் காடுத்ததும், கொடுங்கோளூரில் அவன் சொன்னவுடன் வேள்வி செய்ததும், அவனது ஆரிய அடிமைத்தனத்தைத் தெளிவாகக் காட்டும்.

செங்குட்டுவன் பத்தினிப் படிமைக்குக் கல்லெடுக்க வடநாடு சன்ற போது பேரியாற்றங் கரையிலிருந்து ஒரே நாளில் தன் தலைநகர்க்குத் திரும்பியதனாலும். நீலமலையில் தங்கினதாலும், திரும்பி வந்தக்கால் நெய்தல்நில மகளிர் வரவேற்றுப் பாடிய தனாலும், அவன் காலத்தில் கொடுங்கோளூரே தலைநகராக இருந்ததாகத் தெரிகின்றது. தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுதும் அவன் அதிகாரத்திற் குட்பட்டிருந்ததனால், அவன் விரும்பி யிருப்பின் கொங்குநாட்டுக் கருவூரை மீண்டும் தலைநகராகக்