பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

தூதாண்மைத் தொடர்பும் ஏற்பட்டதன் விளைவாக, ஒரு சிறு உரோமக் குடியேற்றம் மதுரையில் அமைந்ததாகவும், பாண்டியன் மெய்காவற்படை உரோமப் பொருநரைக் கொண்டிருந்ததாகவும் தெரிகின்றது. மதுரை மாநகர்க் கோட்டை வாயிலையும், கோவலன் காலத்தில் உரோமப் படைஞர் காத்து நின்றதை,

66

கடிமதில் வாயில் காவலிற் சிறந்த

அடல்வாள் யவனர்க் கயிராது புக்காங்கு

99

(சிலப். 14:66-7) என்பதனால் அறியலாம். இந் நிலைமை கி. பி. 4ஆம் நூற்றாண்டு வரை நீடித்தது. அதனால், அக்காலத்து உரோமக் காசுகள், பாண்டி நாட்டில் மட்டுமன்றித் தமிழகத்தின் பலவிடங்களிலும் கிடைத் துள்ளன.

யவனர் நன்கலந் தந்த தண்கமழ் தேறல்

99

(புறம்.56:18)

என்பது, யவனர் பாண்டியர் வாணிகத் தொடர்பைக் காட்டும். மேலை யாரியக் கலத்துறைச் சொற்கள்

உலகில் முதன்முதல் ஆழ்கடலிற் பெருங்கலஞ் செலுத்தின வரும், சுற்றுக்கடலோடிகளா(circumnavigators)யிருந்தவரும் தமிழரே. அதனாற் கடலும் கலத்துறையும்பற்றிய பல தமிழ்ச் சொற்கள், மேலையாரிய மொழிகளிற் கலந்துள்ளன.

வாரி-L. mare. வாரணம்-L. marinus, E. marina, marine, mariner.

படகு-LL. barea, It., Sp., Pr. barca, F. barque. E. bark, barque.

L. barga, OF. barg, E. barge.

ட-ர, போலித் திரிபு. ஒ. நோ: கொடுக்கு-ME. croc, E. crook. குடகு, தூத்துக்குடி, கள்ளிமேடு, தரங்கம்பாடி முதலிய இடப்பெயர்கள் ஆங்கிலத்திற் கொண்டுள்ள வடிவுகளையும் நோக்குக.

கலம் - Gk. galaia, L. galea, OF. galie, ME. galie, E. galley

கப்பல் - OE. scip, OFris. skip, schip, NFris. skapp, skep, WFris. skip. OS. skip, MLG. schip, schep, LG. schipp, MDu. sc(h)ip, sc(h)eep, Du. schip, WFlem. scheep, OHG. scif, skef, MHG. schif, schef, G. schiff, ON. skip, Sw. kepp, Da. skib, Goth. skip, F. esquif, It, schifo.

இது தியூத்தானியப் பொதுச்சொல் (Com. Teut.) என்றும், இதன் அடிமூலம் திட்டமாய்த் தெரியவில்லை யென்றும் ("the ultimate etymol- ogy is uncertain") என்றும், எருதந்துறை ஆங்கிலப் பேரகர முதலியிற் (O.E.D.)குறிக்கப்பட்டுள்ளது.