பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82


பாண்டியன் பெயரொடு வரிசை பெற்றவனாயிருந்தும், "விலங்குநடைச் செலவு என்னுந் தொடருக்கு, “இழிகுலத் தோனாதலின், உயர்ந்தோர் வந்தவிட மெங்கும் விலங்கி நடத்தல்.” என்று குறிப்புரைகாரரும், “மேன்மக்களைக் கண்டு ஒதுங்கி நடத்தல்” என்று அடியார்க்குநல்லாரும் உரை வரைந்துள்ளனர். இதனால், அக்காலத்திலேயே, ஆரியர்ச் சூழ்ச்சியால் சில தமிழ வகுப்பாரிடைப் பிணக்கேற்பட்டிருந்ததாகத் தெரிகின்றது.

மணிகளில் நால்வரணப் பிரிவு

66

காக பாதமுங் களங்கமும் விந்துவும்

99

நால்வகை வருணத்து நலங்கே ழொளியவும் (சிலப்.14:180-3)

நால்வகை வருணத் தொளியாவன:

66

அந்தணன் வெள்ளை அரசன் சிவப்பு வந்த வசியன் பச்சை சூத்திரன்

66

66

66

66

66

அந்தமில் கருமையென் றறைந்தனர் புலவர்

இனி, வருண நான்கின் பயனாவன :

மறையோ ரணியின் மறையோ ராகிப் பிறவி யேழும் பிறந்துவாழ் குவரே.

மன்னவ ரணியின் மன்னவர் சூழ இந்நில வேந்த ராவரெழு பிறப்பும்.

99

99

வணிக ரணியின் மணிபொன் மலிந்து தணிவற வடைந்து தரணியில் வாழ்வர்.'

சூத்திர ரணியின் தோகையர் கனகநெல்

99

99

வாய்ப்ப மன்னி மகிழ்ந்துவாழ் குவரே." (சிலப். அடியார். உரைமேற்.) இங்ஙனமே, தொண்மணிகட்கும் நால்வரணப் பகுப்புண்டு. நால்வரணப் பகுப்பு நிலைப்பும் பிராமண வுயர்வும் இதன் பயனாம். தனியின வாழ்வு (Apartheid)

பிராமணர் தமிழரொடு கலந்து குடியிராது, தனித் தெருவிலும் தனிச் சேரியிலும் தனியூரிலுமே குடியிருப்பது வழக்கம். அவர் தம் குடியிருப்புப் பகுதியை அக்கிரகாரம் என்பர். மயிலைநாதர் அதைப் பார்ப்பனச் சேரி என்பர். பிராமணர் குடியிருப்பிற்கு வேந்தர் கொடுத்த தனியூர் சதுர்வேதி மங்கலம் எனப்படும். மதுரைக்குக் கிழக்கேயுள்ள வேம்பற்றூர், கடைக்கழகக் காலத்திற் பிராமணர்க்குப் பிரமதேயமாகக்குலசேகரன்என்னும்பாண்டியனாற்கொடுக்கப்பட்ட தென்றும், அதனால் அது குலசேகர சதுர்வேதி மங்கலம் என்று