பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

பெயர் பெற்றதென்றும் சொல்லப்படுகின்றது. வேந்தர் அரசிய லதிகாரி கட்குப் பட்டம் வழங்கும்போதும், பிராமணர்க்குப் பிரமராயன் அல்லது பிரமமாராயன் என்று வழங்குவதே மரபு. எல்லா வகையிலும் பிரிந்தும் தமித்தும் வாழ்வதே பிராமணர் வழக்கம். லைகூட அவர்க்குத் தனியாக வுண்டு.

சுட

இனங்காத்தல்

சேரன் செங்குட்டுவன் தன் வடநாட்டுச் செலவிடையில் நீலமலையில் தங்கியிருந்தபோது, சில வழிப்போக்குப் பிராமணர் அவனிடம் சென்று, தம்மை வானியங்கும் சித்தர்போற் காட்டி, “நீ பனிமலைக்குச் செல்வதாயின், அங்குள்ள பிராமணரைக் காத்தல் வேண்டும்" என்று கட்டளையிட்டுச் சென்றனர். முத்தமிழ் நாட்டாருள்ளும் பிராமணர்க்கு முந்தி யடிமைப்பட்டவரும் முற்றும் அடிமைப்பட்டவரும் சேரநாட்டாரே.

நூற்றுக்கணக்கினரும் ஆயிரக்கணக்கினருமான பிராமணர் கொழுக்க வுண்டு காலங் கழிக்குமாறு, வேந்தரைக் கொண்டு பெருவேள்விகள் வேட்பதும் வேட்பிப்பதும், இனங்காத்தலை ஒரு பயனாகக் கொண்டதே.

பழந்தமிழ் வேந்தரைப் பழித்தல்

மாவலி என்பவன் பாரதக் காலத்திற்கு முற்பட்டுச் செங் கோலாட்சி செய்த மாபெருஞ் சேரவேந்தன். சேரநாட்டுத் தமிழரின்பின், அவர் வழியினரான மலையாளியர், இன்றும் அவ் வேந்தனை ஆண்டுதோறும் நினைவுகூர்ந்து மகிழ்ச்சியாய்க் கொண்டாடி வருகின்றனர். பிராமணர் அவனை ஓர் அசுரனாக்கி, அவன் திருமாலாற் கொல்லப்பட்டதாகக் கதையுங் கட்டிவிட்டனர்.

மாவலியின் மகன் பிள்ளை பேர்த்தியான உழை, கண்ணபி ரானின் மகன் பிள்ளை பேரனான அநிருத்தனை மணந்தாள். மாவலியின் மரபில் வந்த சீர்த்தியை, கோவலன் காலத்துக் கிள்ளிவளவன் மணந்தான். சோழநாட்டின் ஒரு பகுதியான நடுநாட்டை 14ஆம் நூற்றாண்டுவரை, வாணகோவரையர் என்னும் மாவலி மரபினர் சிற்றரசராக இருந்த ஆண்டுவந்தனர்.

பண்டைத் தமிழர் தேவரும் அல்லாதவரும் என்று குறிக்கு மிடத்துச் சுரர் அசுரர் என்றனர்.

சுல்

=

நெருப்பு. ஒ.நோ: L. sol (sun).

Goth. sunno, OS., OHG. sunno, sunna,. ON. sunna, OE. sunna, sunne, E. sun.

சுல்-சுல்லி=1. நெருப்புள்ள அடுப்பு. 2. அடுப்புள்ள அடுக்களை.