பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

கீழைச் சேரநாடாகிய கொங்குநாட்டின் தென்பகுதியான தகடூர் நாட்டை, அதிகமான் மரபினரான சேரர்குடிக் கிளையினர் ஆண்டு வந்தனர். வடபகுதியின் மேற்பாகத்துக் குடகுநாட்டைக் கோசரும், எஞ்சிய பாகத்தை எருமையூரன் இருங்கோவேள் கங்கர் கட்டியர் ஆகியோரும் ஆண்டுவந்தனர்.

66

66

கொங்கிளங் கோசர்'

குடகக் கொங்கரும் "

99

(சிலப். உரைபெறு கட்டுரை)

(சிலப்.30:159)

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் மேலைச் சேரர்குடிக் கிளைகள் நேர்வழித் தொடர்ச்சி யற்றன. அதன் பின், பெருமாள் மரபினர் சிலர் ஆண்டு வந்தனர். அவருள் மூவர் குறிப்பிடத்தக்கவர்.

முதலாம் சேரமான் பெருமாள் (667

712)

இவர் பெருமாக் கோதை என்னும் இயற்பெயரையும் கழறிற் றறிவார் என்னும் சிறப்புப் பெயரையும் உடைய சிவனடியார். நாலாம் குலசேகரப் பெருமாள் (754 -98)

இவர் குலசேகராழ்வார் என்னும் திருமாலடியார்.

இரண்டாம் சேரமான் பெருமாள் (798 834)

ப்

இவர் ஓர் 'இசலாம்' அடியார். நாட்டைப் பன்னிருவர்க்குப் பகிர்ந்து கொடுத்துவிட்டு மெக்கா சென்றுவிட்டார். (துடிசைகிழார்: சேரர் வரலாறு).

அப் பன்னிரு நாடுகளாவன :

(1) கோழிக்கோடு

(2) வள்ளுவநாடு

(3) கொச்சி

(7) சிரக்கல்

(8) கடத்தநாடு

(9) பாலக்காடு

(4) திருவிதங்கூர்(திருவதங்கோடு) (10) பெய்ப்பூர்

(5) குறும்பரநாடு

(6) கோட்டயம்

(11) பரப்பநாடு (ஒரு பகுதி)

(12)

(மற்றொரு பகுதி)

சேரநாட்டுத் தமிழ், 10ஆம் நூற்றாண்டிற்குப் பின் கொடுந் தமிழாகத் திரிந்து, 15ஆம் நூற்றாண்டிற்குப் பின் திரவிடமாக மாறிவிட்டது. சேர (சேரல) நாடும் மொழியும் கேரளம் எனப்பட்டன.

சேரல்-சேரலம்-கேரளம்.