பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

ரு

தமிழ் இலக்கிய வரலாறு

புலவர் பரிசில், இம்மைக்குரிய உலகியற் பொருளும் மறுமைக்குரிய வீடுபேறும் என இரு வகைத்து. “கோதை மார்பிற் கோதை யானும்” என்னும் புறப்பாட்டு (48), பொய்கை யார் சேரமான் கோக்கோதை மார்பனிடம் ஒரு புலவரை ஆற்றுப் படுப்பது போற் படைத்துறையாகப் பாடிய புலவராற்றுப் படை. அது உலகியற் பொருளைப் பரிசிலாக நோக்கியது. திருமுருகாற்றுப் படை வீடு பேற்றைப் பரிசிலாக நோக்கியது. அதுவும் படைத்துறைப்பாட்டே.

இவ் விலக்கியங் கண்டே புலவராற்றுப் படையை (230) ஒரு பாடாண் துறையாக்கி,

66

'இருங்கண்வானத் திமையோருழைப் பெரும்புலவனை யாற்றுப்படுத்தன்று

என்று கொளுவும்,

99

"வெறிகொ ளறையருவி வேங்கடத்துச் செல்லின் நெறிகொள் படிவத்தோய் நீயும் - பொறிகட்

கிருளீயு ஞாலத் திடரெல்லா நீங்க

அருளீயும் ஆழி யவன்

99

என்று ஓர் ஆற்றுப்படை வெண்பாவும் பாடியுள்ளது புறப் பொருள் வெண்பாமாலை.

அதன் வழியே,

"புலவராற் றுப்படை புத்தேட்கு முரித்தே

என்னும் பன்னிருபாட்டியல் நூற்பா எழுந்தது.

சிவனியமும் மாலியமும் தமிழரின் இருபெரு மதங்களாத லால், திருமுருகாற்றுப்படை சிவனியச் சார்பாயிருத்தல் நோக்கி, ஐயனாரிதனார் தம் ஆற்றுப்படை வெண்பாவை மாலியச் சார்பா யமைத்தார் போலும்!

இங்ஙனம் மதவியலாக வரும் புலவராற்றுப் படையைத் (திருத்) தொண்டராற்றுப்படை யெனல், பொருந்தும்.

திருமுருகாற்றுப்படை, கடைக்கழகக் காலத்திற்குப்பின் தொகுக்கப்பட்ட பத்துப்பாட்டு என்னும் அகவற்பாட்டுத் தொகையின் முதலதாகவும், அதன் கடவுள் வாழ்த்துப் போலும், அமைகின்றது. திரு என்னும் அடை தெய்வத்தன்மை பற்றியது. பரிபாடல்

இது நல்லந்துவனார், இளம்பெருவழுதியார் முதலிய பலர் பாடிய பரிபாடல் என்னும் பாவகை 70 கொண்ட பாடற்றிரட்டு.