பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

87

அறையிலிட்டுப் பூட்டி, பெரும் பகுதியைச் சிதலரிக்க விட்டு விட்டனர்.

இன்று கிடைப்பவற்றின் விளத்தம் வருமாறு:

ஆசிரியர்

சம்பந்தர்

அப்பர்

சுந்தரர்

தொகு மொத்தம்

மொத்தப் பதிகம்

384

307

100

791

தரவு

யில்

பாட்டுகளெல்லாம், பெரும்பாலும் துறையும் மண்டில மும், சிறுபான்மை தாழிசையுமான, பாவினங்களே, ஒருசில கொச்சகங்கள். திருஞானசம்பந்தர் பாடல்கள் தொகை மட்டுமன்றி வகையிலும் மிகச் சிறந்தனவாகும். அடி முற்றெதுகை, நாலடி அல்லது பாவின முற்றெதுகை முதலிய தொடைநயங்களும், திருமுக்கால், திருவிருக்குக் குறள், ஈரடி, ஈரடி மேல்வைப்பு, நாலடி மேல்வைப்பு முதலிய யாப்பு வகை களும், மடக்கு, மாலைமாற்று, ஓரடி (ஏகபாதம்); திருவெழு கூற்றிருக்கை, கரந்த (கூட) சதுக்கம் முதலிய அணிகளும் யாழ்முரி என்னும்

பண்வகையும், அவற்றைத் தனிப்படச் சிறப்பிக்கின்றன.

திருப்பிரமபுரம் வழிமொழித் திருவிராகப் பதிகத்தின் பன்னிரு பாவிசைகளும், வெவ்வேறெழுத்துக் கொண்ட நேரும் நிரையுமான அசைகளுடன் தொடங்கி, நாலடி முற்றெ துகையுடன் மிளிர்கின்றன.

"பாழியுறை வேழநிகர் பாழமணர் சூழமுட லாளருணரா ஏழினிசை யாழின்மொழி யேழையவள் வாழுமிறை தாழுமிடமாங் கீழிசைகொண் மேலுலகில் வாழரைசு சூழரைசு வாழவரனுக் காழியசில் காழிசெய வேழுலகிலூ ழிவளர் காழிநகரே"

என்பது, அப் பதிகத்தின் பத்தாம் பாவிசை.

திருஞானசம்பந்தரின் கயிலைப்பதிகமும் இத்தகையதே.

திருநாவுக்கரசர் திருப்பதிகங்களுள் 135 தாண்டகம் எனப் பெயர் பெற்றுள்ளன. பண்டை யிலக்கணப்படி 26 எழுத்திற்கு மேற்படாத 4 அடிகளைக் கொண்ட பாவினம், மண்டிலம் என்றும், அத்தொகைக்கு மேற்பட்ட எழுத்துகளையுடைய ய அடிகளைக் காண்ட பாவினம் தாண்டகம் என்றும், பெயர்பெறும். மண்டில (விருத்த) எழுத்தளவைத் தாண்டிச்

4