பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

தமிழ் இலக்கிய வரலாறு

99

தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென் ஊன்கலந்தும் உயிர்கலந்தும் உவட்டாமல் இனிப்பதுவே என்னும் இராமலிங்க அடிகள் பாட்டாலும், அறியப்படும். "தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே

"மன்னு மாமலை மகேந்திர மதனிற் சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும்

"பாண்டி நாடே பழம்பதி யாகவும்

99

"தென்னா டுடைய சிவனே போற்றி"

99

99

(சிவ.4)

(கீர்த்தி.)

(கீர்த்தி.)

போற்றி)

ரு

என்னுந் திருவாசக அடிகள், சிவநெறி குமரிநாட்டில் தோன்றிய தமிழர்மதம் என்பதைத் தெரிவிக்கும். சிவப் பன்னிரு திருமுறைகளுள் திருவாசகம் எட்டாவதாகச் சேர்க்கப் பட்டது. திருச்சிற்றம்பலக்கோவை

சிவபெருமானைப்

இதுவும் மாணிக்கவாசகரால் இயற்றப்பட்டதே. தில்லைச் சிற்றம் பலத்தானாகிய பாட்டுடைத் தலைவனாகக் கொண்டமையால், சிற்றம்பலக் கோவையெனப் பெயர் பெற்றது. இது பொதுவாகத் திருக் கோவையென வழங்கும். புறநோக்கில் இது பிற கோவைகள் போன்றே அகப்பொருட் கோவையாகத் தோன்றினாலும், அக நோக்கில், பழுத்த ஆதனையும் (ஆன்மாவையும்) அதற்குப் பேரின் பந்தரும் றைவனையும் முறையே கிளவித்தலைவன் தலைவியராகக் கொண்ட உருவக நாடகமே (Allegory). இங்ஙனம் இருவேறு பொருண்மை யுடைமையால், பிற்காலச் சான்றோரொருவர்,

'ஆரணங் காணென்பர் அந்தணர் யோகியர் ஆகமத்தின் காரணங் காணென்பர் காமுகர் காமநன் னூலதென்பர் ஏரணங் காணென்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர் சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே

என்று பாடி இதனைச் சிறப்பித்தார்.

99

இக் கோவையின் உட்பொருளை யுணர்த்துதற்கு, ‘திருக் கோவையுண்மைக் கருத்து' என்றோ ருரையுமுள்ளது.

தமிழிலுள்ள கோவைகளெல்லாவற்றுள்ளும் தலை சிறந்து சொற்சுவை பொருட்சுவை விஞ்சி நிற்பதால், “தேனூறூ செஞ்சொற் றிருக்கோவை நானூறு” என்று மற்றொரு சான்றோர் பாடியதும் முற்றும் உண்மையே. கோவை வ யெல்லாம் கட்டளைக்

கலித்துறையாலேயே இயலும்.