பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

91

காட்சி என்னும் முதல் துறைச் செய்யுளே, திருக் கோவையின் தனிச்சிறப்பைக் காட்டிவிடும். அது வருமாறு:

"திருவளர் தாமரை சீர்வளர் காவிக ளீசர்தில்லைக்

குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண் டோங்குதெய்வ மருவளர் மாலையொர் வல்லியி னொல்கி யனநடைவாய்ந்

99

துருவளர் காமன்றன் வென்றிக் கொடிபோன் றொளிர்கின்றதே. இதினுஞ் சிறப்பாக வல்லாவிடினும், இது போன்றேனும் ஒரு கட்டழகியின் தோற்றத்தை வேறெவரும் வண்ணிக்க இயலுமோ? கம்பரைத்தான் கேட்கவேண்டும்.

பாங்கன் வினாதல் என்னுந் துறைபற்றிய,

99

'சிறைவான் புனற்றில்லைச் சிற்றம் பலத்துமென் சிந்தையுள்ளும் உறைவான் உயர்மதிற் கூடலி னாய்ந்தவொண் டீந்தமிழின் துறைவாய் நுழைந்தனை யோவன்றி யேழிசைச் சூழல்புக்கோ இறைவா தடவரைத் தோட்கென் கொலாம்புகுந் தெய்தியதே என்னும் பாவிசை, அக்காலத் தில்லைக் கடலண்மையையும், மதுரைக் கடைத்தமிழ்க்

தமிழினிமையையும், யுணர்த்துதல் காண்க.

கழக வுண்மையையும்,

யற்றமிழின்பத்தையும்,

இசைத்

ஒருங்கே

"பாவை பாடிய வாயாற் கோவை பாடுக” என்று சிவ பெருமான் ஏவினார் என்பதற்கேற்ப, அமைந்தது திருக்கோவை.

மாணிக்கவாசகர் காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டென்று இன்று தெரிய வருகின்றது.

திருவிசைப்பா

இது, திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பி, காடவ நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலி யமுதனார், புருடோத்தம நம்பி, சேதுராயர் என்னும் ஒன்பதின்மர் பாடற்றிரட்டு. இது புறச்சமயங்களைக் கண்டித்துச் சிவச்சமயத்தை நாட்டுவது; சிவத்திருமுறை பன்னிரண்டனுள் ஒன்பதாவதாகச் சேர்க்கப்பட்டது. முன்னரே கூறப்பட்ட திருமூலர் திருமந்திரம் பத்தாந் திருமுறை.

கல்லாடம்

இது, அகப்பொருட்டுறைகள் நூற்றைத் தெரிந்து கொண்டு அவற்றைப்பற்றிய திருக்கோவைச் செய்யுள்களைப் பெரிதுந் தழுவிக் கல்லாடனாரால், இயற்றப்பட்ட 100 அகவற் றொகுதி.