பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

தமிழ் இலக்கிய வரலாறு

சிவவழுத்துப் பகுதிகள் இதிற் சிறப்பான கூறுகளா யமைவதால் து சிவநெறி யிலக்கியத்தின் பாற்படும்.

கல்லாடம்

ஒரு சிறந்த பனுவல் என்பதைக் காட்ட, கல்லாடங் கற்றவனொடு சொல்லாடாதே”, “கல்லாடங் கற்ற வனொடு மல்லாடாதே”. என்று இரு பழமொழிகள் வழங்கி வருகின்றன.

இக் கல்லாடர் கடைக்கழகப் புலவரென்பதும், திருக் கோவையிற் குற்றங் கூறிய புலவரைக் கண்டித்தற்கே கல்லாடம் பாடினரென்பதும், சிவபெருமான் அதைக் கேட்டு மகிழ்ந்து ஒவ்வோரகவற்கும் ஒருமுறை தலையசைத்தார் என்பதும்,

கட்டுக்கதையே.

“கல்லாடர் செய்பனுவற் கல்லாட நூறுநூல்

6

வல்லார்சங் கத்தில் வதிந்தருளிச் - சொல்லாயும் மாமதுரை யீசர் மனமுவந்து கேட்டுமுடி தாமசைத்தார் நூறு தரம்

99

என்னும் வெண்பாவும் ஒருவர் கட்டியதே.

பதினோராந் திருமுறை

1. திருவாலவா யுடையார் பாணபத்திரர் பொருட்டுச் சேரமான் பெருமான் நாயனார்க்கு விடுத்த திருமுகப் பாசுரம்.

2. காரைக்காலம்மையார் பாடல்கள்

1. திருவாலங் காட்டுத் திருப்பதிகங்கள் (2)

2. திருவிரட்டை மணிமாலை

3. அற்புதத் திருவந்தாதி

3. கல்லாடனார் இயற்றிய திருக்கண்ணப்பதேவர் மறம். 4. நக்கீரர் பனுவல்கள்

1. கைலைபாதி காளத்திபாதி அந்தாதி

2. திருவீங்கோய்மலை யெழுபது

3. திருவலஞ்சுழி மும்மணிக்கோவை

4. பெருந்தேவ பாணி

5. திருவெழு கூற்றிருக்கை

6. கோவப்பிரசாதம்

7. காரெட்டு