பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

பெரியபுராணம்

தமிழ் இலக்கிய வரலாறு

நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தா தியை முதனூலாகக் கொண்டு, தனியடியார் அறுபத்து மூவரும் தொகையடியார் எழுவகையாருமான சிவத்திருத்தொண்டர் வரலாற்றை, 2ஆம் குலோத்துங்கச் சோழனின் (கி.பி. 1133-50) முதல்மந்திரி யாயிருந்த அருண்மொழித்தேவர் என்னும் சேக்கிழார், 13 சருக்கங்களும் 4253 பாவிசைகளுங் கொண்ட தாகப் பாடிய திருத்தொண்டர் புராணமே பெரியபுராணம் என வழங்குவது. பல புராணங்களைத் தன்னுள்ளடக்கியதனால், அல்லது தொண்டரின் பெருமையை எடுத்துக் கூறுவதனால், பெரியபுராணம் எனப்பட்டதென்று கொள்ளலாம்.

ஒவ்வோ ரடியாரும் ஒவ்வோ ரடியாராகவே யிருந்த திருத்தொண்டத் தொகை யென்னுங் கருவுற்று, ஒவ்வோ ரடியாரும் ஒவ்வொரு பாட்டாரான திருத்தொண்டர் திருவந்தாதி யென்னும் குழவியாகி ஒவ்வோ ரடியாரும் ஒவ்வொரு புராணரான முழு வளர்ச்சியடைந்தது பெரிய புராணம்.

பிறப்பாற் சிறப்பில்லை; எல்லா வகுப்பாரும் வீடுபேற்றிற் குரியர்; இல்லறத்தாலும் வீடு பெறலாம் என்னும் தமிழக்

கொள்கைகளையும்;

"கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

99

(குறள்.2)

என்னுந் திருக்குறட் கருத்தையும்; அறிவு அன்பு தொண்டு ஈகம் (தியாகம்) என்பனவே வீடுபேற்று நால்வாயில் என்பதையும்; நடை முறைச் செய்தியால் விளக்கிக் காட்டுவதும் நாட்டுவதும் பெரியபுராணம் ஒன்றே.

இது புராணம் என்று பெயர் பெற்றிருப்பினும், பல வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டிருப்பதும், அடியார் வாழ்க்கைகளைப் பெரும்பாலும் வரலாற்று முறையிற் கூறுவதும், பாராட்டத் தக்கனவாகும்.

"மாநிலங்கா வலனாவான் மன்னுயிர்காக் குங்காலைத் தானதனுக் கிடையூறு தன்னால்தன் பரிசனத்தால் ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால் ஆனபயம் ஐந்துந்தீர்த் தறங்காப்பான் அல்லனோ (திருநகர. 36)

99

என்னும் பாவிசை சேக்கிழாரின் மந்திரத் திறமையைக் குறிப்பாய்க் காட்டும்.